தேர்தலில் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது - வெளியான அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.
அத்துடன், நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து முதற்கட்டப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு இன்று (11) கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) இவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் முடிவு
அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கையின் சிறிய விரலுக்கு மை பூசினோம்.பலருக்கு இன்னும் மை அடையாளங்கள் உள்ளன.
எனவே, இம்முறை இடது கையின் ஆள்காட்டி விரலை குறியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இன்னும் 3 நாட்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அத்துடன், தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையும்.
மேலும், இந்த வருட தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |