தேர்தல் தோல்வி : பிரேசிலில் இருந்து எதிர்க்கட்சி வேட்பாளர் தப்பியோட்டம்
பிரேசில்ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பிளாவியோ போல்சோனாரோ, தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் பிரேசிலிலிருந்து ஆர்ஜென்ரீனாவுக்கும், பின்னர் ஈக்வடோருக்கும் தப்பிச் சென்றதாக ஆர்ஜென்ரீனாவின் குடிவரவு ஆணையம் இன்று(28)புதன்கிழமை தெரிவித்துள்ளது
பிரேசிலில் அவர் மீது சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் சூழலில், அவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா விசா வழங்கி, நாட்டிற்குள் நுழைய அனுமதி
"ஃபிளேவியோ போல்சனாரோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா விசா வழங்கி, நாட்டிற்குள் நுழைய அனுமதி அளிக்கும்" என அமெரிக்க வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் ஏற்கனவே அமெரிக்கா நோக்கிப் பயணித்து விட்டாரா என்பது குறித்து அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவர் பிரேசிலை விட்டு வெளியேறிவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறுக்கமடைந்த சட்டப் பிடிகள்
தேர்தல் தோல்விக்குப் பிறகு ஃபிளேவியோ போல்சனாரோ மீது சட்டப் பிடிகள் இறுக்கமடைந்துள்ளன. பிரேசில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அவரது கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டு, ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

தனது தந்தை முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ குறித்த திரைப்படத்திற்கு நிதி திரட்டியதில் ஊழல் மற்றும் $1 பில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்குகளில் அவர் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுத்து சட்டப் போராட்டம் நடத்தப் போவதாக ஃபிளேவியோ கூறிய போதிலும், அவரது சொந்த அரசியல் கட்சியும் கூட்டணிக் கட்சிகளும் லூலாவின் வெற்றியை ஏற்றுக்கொண்டதால் அவர் அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது சகோதரர் எட்வர்டோ போல்சனாரோ தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இதேவேளை தோல்வியடைந்த ஃபிளேவியோ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |