அவர் சிறந்த சட்டத்தரணி என்றால் இவர் சாதித்தது என்ன..!
இலங்கை தமிழரசுக்கட்சிக்கான தலைவர் தெரிவு எதிர்வரும் 21 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
தற்போது இந்ததலைவர் தெரிவுக்கான அதிகம் பேசப்படும் வார்த்தை தமிழ் தேசியத்தை ஆதரிப்பவரை தேர்ந்தெடுப்பது என்பது.
அப்படியென்றால் தமிழ்தேசியத்தை ஆதரிப்பவர் இலங்கை தமிழரசுக்கட்சியில் யார் உள்ளனர்.
தற்போது சிறீதரன் தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர் என்ற தோரணையிலும் சுமந்திரன் சிறந்த சட்டத்தரணி ஆனால் அவர் தமிழ் தேசியத்தை ஆதரிக்காதவர் எனவும் அவர் வந்தால் தமிழ் தேசியம் நாசமாகிவிடும் எனவும் தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்கள் என்பவர்கள் கூறுகின்றனர்.
தலைவர் பிரபாகரனின் தமிழ் தேசிய கொள்கையை உலகறிய செய்ய
ஆனால் இந்த தமிழ் தேசிய பற்றுள்ளவர் என கூறப்படுபவரின் அரசியல் தொடக்கமே மண்டையன் குழுவிலிருந்தே ஆரம்பமாகின்றது. அதன்பின்னரே அந்தக்குழுவை கைவிட்டு தான் ஏதோ தமிழ் தேசியவாதி போலவும் தலைவர் பிரபாகரனின் தமிழ் தேசிய கொள்கையை உலகறிய செய்யப்போவதாகவும் பிதற்றுகிறார்.
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கை தழுவிய ரீதியில் அரசியல் செயற்பாட்டை முன்னெடுப்பதே தமிழ் தேசியமாகும்.கிளிநொச்சியில் மட்டும் அரசியல் செய்வது அல்லது நாடாளுமன்றில் மட்டும் வீராவேசமாக உரை நிகழ்த்துவது மட்டும் தமிழ் தேசியம் ஆகாது.
சிறீதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் போதே அந்த கூட்டமைப்பில் இருந்த முன்னாள் போராளி குழுக்கள் அந்த கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டன.அவர் தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர் அதனை முன்கொண்டு செல்பவர் என்றால் அந்த பிரிவை இவரால் ஏன் தடுக்க முடியாமல் போனது.தலைவர் பிரபாகரனின் தமிழ் தேசியத்தை உலகறியச் செய்ய வெளிக்கிட்டவருக்கு அவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைவை ஏன் தடுக்க முடியாமல் போனது.
மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்துடன் சுமந்திரனை
அதேபோன்று விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்துடன் சுமந்திரனை ஒப்பிட்டவரே இந்த சிறீதரன்தான்
சுமந்திரன் சிறந்த சட்டத்தரணி அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அவர் வெளிப்படையாக எல்லாவற்றையும் தெரிவிப்பதால் மட்டும் தமிழ் தேசியம் படுத்துவிடாது.அப்படியென்றால் அவர் தமிழ் தேசியத்தை சிதைக்கிறார் என்றால் அவருக்கு எதிராக கட்சியில் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழ் தேசியம் என்பது தமிழ் மக்களின் ஆன்மாவில் கலந்துள்ளது.இதனை அற்ப சலுகைகளுக்காக அரசியல் செய்பவர்கள் தமது வாயில் எவ்வித கூச்சமும் இன்றி சொல்வதுதான் வேதனையிலும் வேதனை.
தேர்தல் வரும்போது தமிழ் தேசியம் அது முடிந்த பின்னர் எல்லாம் வெற்றுவேசம் என்பது 2009 ஆம் ஆண்டு போர் முடிந்த பின்னர் தமிழ் மக்கள் கண்ட கண்கண்ட உண்மை.
இறுதியாக பொய் முகத்தை காட்டாமல் யதார்த்தமாக செயற்படுங்கள் ஐயா. தொடர்ந்தும் தமிழ் மக்களை முட்டாள்கள் ஆக்காதீர்கள். தவறின் நீங்களும் தமிழ் மக்களால் தூக்கி எறியப்படுவீர்கள்