மின் கட்டணம் 30% குறைக்க தீர்மானம்: அமைச்சர் அறிவிப்பு
Sri Lanka
Sri Lanka Electricity Prices
Kanchana Wijesekera
By Sathangani
9 months ago

Sathangani
in பொருளாதாரம்
Report
Report this article
நாட்டில் எதிர்வரும் 18ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் மின்கட்டணம் 30 சதவீதத்தால் குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
மாத்தறை (Matara) – தெனியாய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டண குறைப்பு
அத்துடன் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலேயே இந்த மின் கட்டண குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான மக்களின் வாய்மூல கருத்துகள் கோரப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி