மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டண திருத்தத்தின் விலை பட்டியலை அமைச்சர் கஞ்சன விஜயசேகர இன்று (24) நாடாளுமன்றத்தில் சமர்பித்தார்.
இதன்படி, 0-30 வரையான அலகுக்கான விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய அலகின் விலை 25 ஆக புதிய திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலையான கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
23% சலுகை
இதன்படி, மின்சாரக் கட்டணத்தில் முதலாம் பிரிவினருக்கு குறைந்த பட்சம் 23% சலுகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள் 1,744,000 எனத் தெரிவித்தார்.
மேலும், 31-60 அலகுகளுக்கு 9% மற்றும் 0-60 அலகுகளுக்கு 7% மின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
0-30 அலகுகள் வரை பயன்படுத்தும் 15,646 மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணம் ஜூலை மாதத்தில் 23% ஆக குறைக்கப்படும் என்றும், 31-60 அலகுகள் வரை பயன்படுத்தும் 10,692 மத வழிபாட்டுத் தலங்களுக்கு 7% மின் கட்டணத்தைக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உணவக பிரிவினருக்கு 29% முதல் 40% வரை மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் ஜனக ரத்நாயக்க நேரில் வழங்கிய அறிக்கைகள், அனைத்தும் மின்சாரசபையை நட்டத்திற்கு அழைத்து சென்றதாகவும், மின்சார கட்டணத்தை திருத்தியதில் 32 பில்லியன் நட்டத்தை மின்சாரசபை எதிர்நோக்கியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
Statements made by Janaka Rathnayaka in person do not reflect the sentiments of @pucslofficial. By deliberately preventing @CEB_LK from revising the electricity tariff Janaka Rathnayaka was instrumental in causing a loss of Rs. 32 Bn. - @kanchana_wij #SriLanka #Colombo #SLnews… pic.twitter.com/FcYyhtRpTO
— Manthri.LK_Watch (@ManthriLK_Watch) May 24, 2023
