மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
Sri Lanka
Sri Lanka Electricity Prices
By Dharu
பொருட்களின் விலை சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் மின் கட்டணமும் குறைக்கப்படும் எனவும் அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் டிசம்பருக்குள் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இக்கட்டான சூழ்நிலையிலும் தனது அரசியலைப் பற்றி சிந்திக்காமல் மக்களைப் பற்றி சிந்தித்து இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அதிபர் முன்வந்தார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாடெங்கிலும் வரிசையில் நிக்கும் நிலைமை மாற்றியமைக்கப்பட்டது என்றும் இரண்டு மாதங்களில் அந்த யுகத்தை மக்கள் கடந்திருந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி