தேரருக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
Sri Lanka Electricity Prices
Omalpe Sobitha Thero
Kanchana Wijesekera
By Sumithiran
மின்கட்டணம் துண்டிக்கப்படும்
மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மின் துண்டிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் விடுத்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று இலட்சம் ரூபாயாக உயர்ந்த மின் கட்டணம்
சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர், தனது விகாரையின் மின் கட்டணம் மூன்று இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், அதனால் தான் மின்கட்டணத்தை செலுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே அமைச்சர் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அண்மையில் அரசாங்கம் மின்கட்டணங்களை பாரியளவில் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்