மின் கட்டண அதிகரிப்பு -முழுமையான விபரம் இதோ
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான கட்டண விபரம்
இதன்படி, 1 முதல் 30 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 2 ரூபா 50 சதமாக காணப்பட்ட கட்டணம், 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
31 முதல் 60 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 4 ரூபா 85 சதமாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 16 ரூபாவாகவும், 61 முதல் 90 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 7 ரூபா 85 சதமாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 16 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
91 முதல் 180 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 27 ரூபாவாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 50 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய கட்டண உயர்வின்படி
புதிய கட்டண உயர்வின்படி, 30 யூனிட்டுக்கும் குறைவான மின் கட்டணத்தில் 198 ரூபாய் மேலதிகமாக சேர்க்கப்படும். 30-60 யூனிட்டுகளுக்கு இடையே 200% அதிகரிப்பு அதாவது மின்கட்டண உயர்வு மேலதிகமாக 599 ரூபாய். 60-90 யூனிட்டுகளுக்கு இடையில், 125% கட்டணம் அதிகரிக்கப்படுவதால், மின் கட்டணம் 1461 ரூபாவால் அதிகரிக்கும். மின் கட்டணம் 90-120க்குள் ரூ.2,900 அதிகரிக்கும்.
அலகு 0-30 அதிகரிப்பு 264% அலகு 31-60 அதிகரிப்பு 211% அலகு 61-90 அதிகரிப்பு 125% அலகு 91-120 அதிகரிப்பு 89% அலகு 121-180 அதிகரிப்பு 79%