சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு...!
ஹார்முஸ் நீரிணையைப் (Strait of Hormuz) பாதுகாப்பதற்குப் போர்க்கப்பல்களை அனுப்புமாறு நட்பு நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் பெறும் உலக நாடுகள் அந்தப் பாதையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு நாங்கள் பெருமளவில் உதவுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதல்கள்
இந்தநிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை எவ்வித போர்நிறுத்தத்திற்கும் (Ceasefire) வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அத்தோடு, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்கா தொடர்பான அனைத்து இடங்களும் சட்டபூர்வமான இலக்குகள் (Legitimate targets) என்று ஈரானின் புரட்சிகர இராணுவப் படை (IRGC) எச்சரித்துள்ளது.
இவ்வாறான நிலையில், இந்தப் போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் வரலாற்றிலேயே மிகப்பெரிய முடக்கம் ஏற்பட்டுள்ளது.
எரிசக்தி விலைகள்
இதனால் எரிசக்தி விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) முக்கிய எரிசக்தி மையங்கள் மீதான ட்ரோன் தாக்குதல்களால் எண்ணெய் ஏற்றுமதி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த பெப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |