எலான் மஸ்கின் முதலாவது அதிரடி நடவடிக்கை - இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட உயர் அதிகாரிகள்!

Twitter Elon Musk Parag Agrawal
By Kalaimathy Oct 28, 2022 10:04 AM GMT
Report

டெஸ்லா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் டுவிட்டரை வாங்குவதற்கு டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதனடிப்படையில் டுவிட்டரை வியாழக்கிழமை மாலை அதிகாரபூர்வமாக தனதாக்கிக்கொண்ட உலக பெரும்பணக்காரர் எலான் மஸ்க், தனது உரிமையை வெளிப்படுத்தும் விதமாக முதல் நாளிலேயே அதிரடி நடவடிக்கை ஒன்ழறை எடுத்துள்ளார்.

அந்த வகையில், சில முக்கிய நிர்வாகிகளை நிறுவனத்திலிருந்து நீக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் இரண்டு இந்திய வம்சாவளியினர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவோடு இரவாக பதவி நீக்கப்பட்ட அதிகாரிகள்

எலான் மஸ்கின் முதலாவது அதிரடி நடவடிக்கை - இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட உயர் அதிகாரிகள்! | Elon Musk Bought Twitter Indian Origins Dollar

இந்திய வம்சாவளியினர்களாகிய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் (Parag Agrawal) மற்றும் சட்ட விவகாரங்கள் மற்றும் கொள்கைத் தலைவர் விஜயா காடே (Vijaya Gadde) ஆகியோரை விழக்கிழமை இரவே எலான் மஸ்க் நீக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களைத் தொடர்ந்து, தலைமை நிதி அதிகாரி நெட் செகல் (Ned Segal), பொது ஆலோசகர் சீன் எட்ஜெட் மற்றும் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி சாரா பெர்சனெட் (Sarah Personette) ஆகியோரை நிறுவனத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்.

எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்து, விழக்கிழமை மாலை டுவிட்டர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். தன்னை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட உயர் நிர்வாகிகளை உடனடியாக நீக்கினார்.

நீக்கப்பட்ட நிர்வாகிகளில் ஒருவர் உடனடியாக டுவிட்டரின் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீரென ரத்து

எலான் மஸ்கின் முதலாவது அதிரடி நடவடிக்கை - இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட உயர் அதிகாரிகள்! | Elon Musk Bought Twitter Indian Origins Dollar

இந்நிலையில், டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை எலான் மஸ்க் தானே எடுத்துக்கொள்வார் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அவர் அந்த பாத்திரத்தில் நீண்டகாலம் இருப்பார் என்றும் கூறியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், முன்னர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்வதாக எலான் மஸ்க் கடந்த ஜூலை 10ஆம் திகதி அறிவித்தார்.

பின்னர், டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்று எலான் மஸ்க் கூறினார்.

இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ஒப்பந்தத்தை தட்டிக்கழிப்பதற்காக இது போன்ற காரணங்களை எலான் மஸ்க் கூறுவதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 28க்குள் அதாவது இன்றைய தினத்திற்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய காலக்கெடு விதித்தது.

எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டொலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பணியாளர்களை ஆச்சரியப்படுத்திய எலான்

எலான் மஸ்கின் முதலாவது அதிரடி நடவடிக்கை - இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட உயர் அதிகாரிகள்! | Elon Musk Bought Twitter Indian Origins Dollar

இந்த நிலையிலேயே, எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டரின் தலைமையகத்திற்கு நேற்று சென்றார். அவ்வாறு செல்லும் போது அவர் தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி(சிங்க்) ஒன்றை சுமந்து சென்று அங்கு உள்ளவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இன்று நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் டுவிட்டரின் உரிமையாளரானார் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார். ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

பராக் மற்றும் நெட் செகல் ஆகியோர் டுவிட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் இனி அங்கே திரும்பமாட்டார்கள் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026