தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி! மீண்டும் சந்தேகநபரானார் துமிந்த
தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிணையில் அனுப்பப்பட்டுள்ளார்.
கல்கிசை பதில் நீதிபதி ரவி மத்துகம இன்று (10) தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் செல்லுமாறு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வெள்ளவத்தையில் உள்ள ஹேவ்லாக் வீட்டுவசதி வளாகத்தில் ஒரு மூதாட்டியின் பையில் பாதுகாப்பு அதிகாரிகளால் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணை
இந்த விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதன்படி, இது குறித்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் படி, அவர் மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |