ஃபிஃபா கனவை தொலைத்த மொராக்கோ! பிரித்தானிய தலைநகரில் பெரும் பதற்றம்
மொராக்கோ பிரான்சிடம் மீண்டும் தோல்வியடைந்ததால் அந்நாட்டின் ஃபிஃபா உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்த நிலையில் லண்டனில் ரசிகர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன.
பரவலான அமைதியின்மை ஏற்படும் என்ற அச்சம் இருந்தபோதிலும் பாரிஸ் நகரம் பெரும்பாலும் அமைதியாகவே இருந்த நிலையில், லண்டனில் இவ்வாறு மோதல் உருவாகியுள்ளது.
குழப்பமான மோதல்கள்
இந்த நிலையில், லண்டனின் எட்ஜ்வேர் வீதி குழப்பமான மோதல்களின் களமாக மாறியதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Image Credit: Latest News in Cyprus - Philenews
அதன்போது, அப்பகுதியில் உருவான பெருங்கூட்டங்களைக் கட்டுப்படுத்த கலவரத் தடுப்புப் காவல்துறை களமிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், கலவரத் தடுப்பு உடைகள் அணிந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை நோக்கி ஒளிவிளக்குகள், பட்டாசுகள் மற்றும் போத்தல்களை வீசுகின்றமை பதிவாகியுள்ளது.
அரசியல் எதிர்வினை
அறிக்கைகளின்படி, கலவரங்களின்போது காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தக் காட்சிகள் அரசியல் ரீதியான எதிர்வினைகளையும் தூண்டியதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவைப் பிரதிபலிக்கும் வகையில், பாரிஸில் பிரான்ஸ் மற்றும் மொராக்கோ கொடிகளை ஏந்திய கார்கள் ஒலிப்பான்களை எழுப்பி ஒன்றாகக் கொண்டாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |