பலாலி வைத்தியசாலை காணியை விடுவிக்க முடியாது! பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்

Sri Lankan Tamils Army Day Ministry of Defense Sri Lanka
By Dharu Jul 10, 2026 09:36 AM GMT
Report

பலாலி இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணியை இராணுவ பராமரிப்பில் இருந்து விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பலாலி பகுதி அதி அவதானமிக்க பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடைமுறை முன்னெடுக்கப்பட்டுன்னதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட்ட அவர்,

சலேவுக்கு ஆதரவான மனுக்கள்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

சலேவுக்கு ஆதரவான மனுக்கள்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

இழப்பீடு வழங்க நடவடிக்கை

“இந்த வலயத்துக்குள் உள்ள 1661 ஏக்கர் காணியை சட்டத்தின் பிரகாரம் இராணுவத்துக்கு உரித்தாக்குவதற்கும், காணி உரிமையாளர்களுக்கு காணி அமைச்சின் ஊடாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பலாலி வைத்தியசாலை காணியை விடுவிக்க முடியாது! பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம் | Palali Land Cannot Be Released Jaffna Army

பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அவசியமற்ற காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றன. 2009 முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 64,663 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 692 ஏக்கர் காணிகளை விடுவித்தோம். எதிர்வரும் ஓரிரு மாத காலப்பகுதியில் 243 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தத்தவில்லை. அத்தியாவசிய தேவை மற்றும் பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் இந்த காணிகள் பயன்படுத்தப்படுகின்றன. பலாலி விமான நிலையம் 774.98 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சஜித்துக்கும் மறைமுகமாக வழங்கப்பட்ட போதைப்பொருள் பணம்! ஆளும் தரப்பு பகிரங்கம்

சஜித்துக்கும் மறைமுகமாக வழங்கப்பட்ட போதைப்பொருள் பணம்! ஆளும் தரப்பு பகிரங்கம்

பயிர்ச்செய்கையில் இராணுவத்தினர்

எதிர்காலத்தில் விமான நிலைய அபிவிருத்தி பணிகளுக்காக மேலதிகமாக காணிகள் தேவைப்படும் என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபையானது விமான படை ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது. காணி அமைச்சு, நில அளவைத் திணைக்களம், முப்படை மற்றும் பிரதேச செயலக பிரிவுகளை ஒன்றிணைந்து பொது கொள்கை அடிப்படையில் முரண்பாடற்ற வகையில் இந்த கோரிக்கைக்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

பலாலி வைத்தியசாலை காணியை விடுவிக்க முடியாது! பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம் | Palali Land Cannot Be Released Jaffna Army

இந்த பகுதியில் இராணுவத்தினர் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. தமது சுய தேவைக்காகவே பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இது வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல, பலாலி இராணுவ வைத்தியசாலை கட்டடத்தை புனரமைக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

இந்த வைத்தியசாலை 27.9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வைத்தியசாலை புனரமைப்புக்கு 99.3 மில்லியன் ரூபா மதிப்படப்பட்டு 55 மில்லியன் ரூபா இதுவரையில் செலவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 42.11 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முப்படையின் பயன்பாட்டில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காணிகளை தற்போது விடுவிப்பதற்கான இயலுமை கிடையாது” என சுட்டிக்காட்டியுள்ளார். 

2.5 மில்லியன் மாயம் : நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட COPF குழுவின் அறிக்கை

2.5 மில்லியன் மாயம் : நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட COPF குழுவின் அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026