அரங்கேறிய தாக்குதல் திட்டம்! துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்

Sri Lanka Police Crime Prisons in Sri Lanka Prison
By Thulsi Jul 10, 2026 03:29 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளே இந்த மரண அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அச்சுறுத்தலில் "உன்னை எங்காவது கண்டால் கொன்றுவிடுவோம். வெளியே சிக்கும் போது உன்னை விடமாட்டோம், கொன்றுவிடுவோம்" என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் பலி: அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் பலி: அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை

விசேட நடவடிக்கை

அதிகாரிக்குஎதிராக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அரங்கேறிய தாக்குதல் திட்டம்! துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல் | Death Threats Against Prison Officer Who Fire

குறித்த அதிகாரி, டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அன்று ஏற்பட்ட அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டு கடமைக்குச் சமூகமளித்திருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியைப் பாதுகாக்குமாறு, சக அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட சிறை அதிகாரிகள் : பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட சிறை அதிகாரிகள் : பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

துணிச்சலான நடவடிக்கை

சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 7 அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு புதன்கிழமை (08) அன்று கொண்டுவரப்பட்டபோது, அங்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சரைச் சந்தித்த அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

அரங்கேறிய தாக்குதல் திட்டம்! துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல் | Death Threats Against Prison Officer Who Fire

“அந்த அதிகாரியின் துணிச்சலான நடவடிக்கையால்தான் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டு, மிகப்பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டது. எம்மைக் காப்பாற்றிய அந்த அதிகாரியைப் பற்றி ஏன் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன?” என அவர்கள் அமைச்சரிடம் வினவினர்.

“நாங்கள் அனைவரும் ஒரே சீருடை அணிந்த அணியாகச் செயல்படுபவர்கள். அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விமர்சனங்களை நிறுத்தி, அவரைப் பாதுகாக்க வேண்டும்” என்று சிறைச்சாலை அதிகாரிகள் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.  

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்தில் நடந்த மோசடி அம்பலம்

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்தில் நடந்த மோசடி அம்பலம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016