நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் பலி: அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை

Sri Lanka Negombo Law and Order
By Shalini Balachandran Jul 09, 2026 06:44 PM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலையைத் தொடர்ந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் சிலர் உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடியாக சுயாதீனமான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணையை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) இந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் அண்மையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக எனக் கூறி கைதிகள் குழுவொன்று வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தது.

தன்னை கைது செய்யவேண்டாமென்ற கோட்டா : நீதிமன்றின் உத்தரவு

தன்னை கைது செய்யவேண்டாமென்ற கோட்டா : நீதிமன்றின் உத்தரவு

இடமாற்றங்கள் 

இருப்பினும், இந்த இடமாற்றங்களின் பின்னர் கைதிகள் சிலர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அந்த மரணங்கள் நிகழ்ந்த விதம் குறித்து பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் பலி: அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை | Amnesty Demands Probe Over Negombo Prisoner Deaths

அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அதிகாரிகளின் நேரடிப் பொறுப்பாகும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட சிறை அதிகாரிகள் : பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட சிறை அதிகாரிகள் : பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

அதிகளவிலான நெருக்கடி 

இந்த மரணங்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் சர்வதேச தரத்திற்கு இணங்க இருக்க வேண்டும் எனவும் ஏதேனும் சித்திரவதைகளோ அல்லது அலட்சியப்போக்கோ இடம்பெற்றிருந்தால் அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக தாமதமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் பலி: அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை | Amnesty Demands Probe Over Negombo Prisoner Deaths

இலங்கை சிறைச்சாலைகளில் காணப்படும் அதிகளவிலான நெருக்கடி நிலை மற்றும் கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக சர்வதேச ரீதியாக தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த பின்னணியில் இச்சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானது என சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனா - ரஷ்யாவுடன் ஈரானை இணைக்கும் முக்கிய தொடருந்து பாலத்தை தகர்த்தது அமெரிக்கா

சீனா - ரஷ்யாவுடன் ஈரானை இணைக்கும் முக்கிய தொடருந்து பாலத்தை தகர்த்தது அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026