நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பின் காணாமல் போன துப்பாக்கி மீட்பு!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலை அடுத்து காணாமல்போன ரிப்பீட்டர் ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த துப்பாக்கி சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 6ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இந்த துப்பாக்கி காணாமல்போயிருந்தது.
போகம்பரை சிறைச்சாலை
அத்துடன் விசாரணைகளை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சொந்தமான 22 ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளையும் 10 ரி58 ரக துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கண்டி - பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளை அடைப்பதற்கான நடவடிக்கைகள் வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |