சஜித்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவினால் பிரப்பிக்கபட்ட இந்த அழைப்பானையானது இவரிடமிருந்து ஒரு வாக்குமூலத்தைப் பெறுவதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த மாதம் 27ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு எழுத்து பூர்வமான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சேவை நீக்கம் செய்யபட்ட சமிந்த குலரத்ன
முந்தைய அரசாங்கத்தின் போது, சமிந்த குலரத்னவை நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமாக நியமிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒரு உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.

அந்த நியமனம் தொடர்பான விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்கும், அது குறித்த மேலதிக தகவல்களைப் பெறுவதற்கும் சஜித் பிரேமதாசவை இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமிந்த குலரத்னவின் சேவை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |