எக்ஸ் (x) தளத்தை 10 நாட்களுக்கு முடக்கிய நாடு
Elon Musk
World
X
By Thulsi
8 months ago
எக்ஸ் (x) இன் உரிமையாளர் எலான் மஸ்க் (elon musk) சமூக வலைப்பின்னலின் அனைத்து விதிகளையும் மீறியுள்ளார் என வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) தெரிவித்துள்ளார்.
வெனிசுவெலாவில் (Venezuelan) சமூக ஊடகங்களில் ஒன்றான எக்ஸ் (X) வலைத்தளம் 10 நாட்களுக்கு முடக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
வெறுப்பைத் தூண்டி விட்டார்
வெனிசுவெலாவின் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடகத்தை 10 நாட்களுக்கு முடக்குவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு நான் கையெழுத்திட்டுள்ளேன் என வெனிசுவெலா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
X இன் உரிமையாளர் எலான் மஸ்க் “வெறுப்பைத் தூண்டி விட்டார்” என்று வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி