கனேடிய சராசரி வாடகைத் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கனடாவில் (Canada) கடந்த ஜூலை மாதத்திற்கான சராசரி வாடகைத் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டுமனை தொடர்பான நிறுவனங்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சராசரி வாடகைத் தொகை கடந்த மாதம் 2200 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு வாடகைத் தொகை 5.9 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
வாடகைத் தொகை உயர்வு
இந்த நிலையில், பிரிட்டிஸ் கொலம்பியா (British Colombia) மற்றும் ஒன்றாரியோ (Ontario) தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளாக குறிப்பிடப்படுகிறது.

மேலும், கனேடிய மாகாணமான சஸ்கற்றுவானில் (Saskatchewan) கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு வா வாடகைத் தொகை 22.2 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
எவ்வாறாயினும், கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் சராசரி வீட்டு வாடகை தொகையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்