ஹமாஸின் புதிய தலைவரையும் கொன்று புதைப்போம்: மிரட்டல் விடுத்துள்ள இஸ்ரேல்
ஹமாஸின் (Hamas) புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள யாஹ்யா சின்வாரையும் (Yahya Sinwar) கொன்று புதைத்து விடுவோம் என இஸ்ரேல் (Israel) கடும் மிரட்டல் விடுத்துள்ளது
இந்த நிலையில், இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி (Herzi Halevi ) சின்வாரை கண்டுப்பிடித்து அவரையும் அழிப்பதாகவும் மீண்டும் புதிய தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க ஹமாஸை ஆயத்தமாக இருக்குமாரு சபதம் விடுத்துள்ளார்.
அந்தவகையில், காசாபோர் நேற்றுடன் 11வது மாதத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த வருடம் ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளில் யாஹ்யா சின்வாரும் ஒருவர் என்பதை மேற்கோள்காாட்டியே இஸ்ரேல் குறித்த மிரட்டலை விடுத்துள்ளதாக தெரியவள்துள்ளது.
இராணுவத் தளபதி
குறிப்பாக, தாம் தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு (Netanyahu) நேற்று (07) இராணுவத் தளமொன்றில் வீரர்களுடன் கலந்துரையாடும் போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காசா பிராந்தியத்தில் அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டாலும், ஹமாஸ் தலைவர்கள் உட்பட அதன் உறுப்பினர்கள் அனைவரையும் அழித்தொழிப்பதே தங்களின் இலக்கு என இஸ்ரேல் கூறி வருகின்றமை குறிப்படத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்