எல்பிட்டிய பிரதேச சபை தலைவர் நியமனம் : வெளியான வர்த்தமானி
எல்பிட்டிய பிரதேச சபையின் (Elpitiya Pradeshiya Sabha) தலைவர் மற்றும் உப தலைவரின் நியமனம் குறித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நேற்று (08.11.2024) வெளியிட்டுள்ளது.
அதன்படி, எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவராக கொழும்பு தந்திரியைச் சேர்ந்த நிஷாந்த பெரேராவும் (Nishantha Perera) உப தலைவராக வாகொட பத்திரத்தைச் சேர்ந்த சுமித் சந்தானவும் (Sumith Chandana) நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி வெற்றி
கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வெற்றி கிடைத்தது.
இதற்கமைய, தேசிய மக்கள் சக்தி 17,295 வாக்குகளைப் பெற்று 15 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
29 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 1 சுயேட்சைக் குழுவும் இந்த தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |