மோசடி பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நபர் கைது!
பன்னல சந்தலங்காவ பிரதேசத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணத்தை மோசடி செய்த தொழிற்சாலையின் கொள்வனவு திணைக்கள ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், தனது தாயார் பெயரில் தொடங்கப்பட்ட போலி நிறுவனத்தில் ஆடைத் தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள் வாங்கித் தருவதாகக் கூறி ஒன்றரை ஆண்டுகளில் 18 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சந்தேக நபர் 2 BMW i8 ரக கார்கள், ஆடி ரக கார் மற்றும் பெர்ஜோ ரக ஜீப் ஒன்றை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.
விளக்கமறியல்
அத்துடன், வைகல பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 110 இலட்சம் ரூபாவிற்கு வீடு ஒன்றை கொள்வனவு செய்த அவர், பன்னல நகரில் 9 பேர்ச்சஸ் காணியை 130 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்ததும் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட உள்ளதுடன் விசாரணை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 13 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |