இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக முன்மொழியப்பட்ட பெருந்தொகை
2026 வரவுசெலவு திட்டத்தில் இந்திய அரசு, இலங்கைக்கு கடன்கள் மற்றும் மானியங்கள் வடிவில் 400 கோடி ரூபாய் உதவி வழங்க முன்மொழிந்துள்ளது.
2026/27 வரவுசெலவு திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(01) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த ஆண்டு வரவுசெலவு திட்ட வரைவின்படி, இந்திய அரசின் மொத்த செலவு 583 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்கு உதவி
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு உதவி வழங்குவதற்காக இந்தியா முன்மொழிந்த வரவுசெலவு திட்டத்தில் 5,686 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது, இது கடந்த ஆண்டை விட 4 வீதம அதிகம் என கூறப்படுகிறது.

இதன்போது, அதிகபட்ச தொகையாக 2,289 கோடி ரூபாய் பூட்டானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு ஒதுக்கப்பட்ட 120 கோடி ரூபாயை இந்த ஆண்டு 60 கோடி ரூபாயாக குறைக்கவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த ஆண்டு வரவுசெலவு திட்டத்தில், இலங்கைக்கு இந்தியா 300 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது, இதன்படி, இந்த ஆண்டு அதை 100 கோடி ரூபாய் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்