அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த குரங்குகள் தப்பி ஓடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் மிசிசிப்பி நெடுஞ்சாலையில் லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் துலேன் பல்கலைக்கழகத்தில் (Tulane University) இருந்த ஆய்வகக் குரங்குகளே இவ்வாறு தப்பி ஓடியுள்ளன.
அதாவது, குறித்த குரங்குகளை ஏற்றி சென்ற ட்ரக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள்
இதையடுத்தே, அதிலிருந்த ஹெபடைடிஸ் சி (Hepatitis C) மற்றும் கொரோனா (Covid-19) போன்ற பல வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருந்த குரங்குகள் தப்பியோடியுள்ளன.

இவை பொதுமக்களுக்குச் சுகாதார அபாயத்தை ஏற்படுத்தலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஒரு குரங்கு
தப்பி ஓடிய குரங்குகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுவரை தப்பியோடியுள்ள ஒரு குரங்கைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |