இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு!! சிங்கப்பூர் அரசாங்கம் இணக்கம்
இலங்கை பணியாளர்களுக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடியை தீர்க்கும் முகமாக சிங்கப்பூர் அரசாங்கம் இந்த முடிவுக்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
தற்போது சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜீ.எல்.பீரிஸின் கோரிக்கை
இலங்கை பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு சந்தர்ப்பங்களை உருவாக்குமாறும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜீ.எல்.பீரிஸின் கோரிக்கைக்கு சிங்கப்பூர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததாகவும், சுகாதாரத் துறையில் அதிகளவில் வேலைவாய்ப்பைபுகளை வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்