பயணக் கட்டுப்பாடுகளில் மாற்றம் : முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் பிரித்தானிய பிரதமர்
கொரோனா வைரஸ் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்பிரகாரம், பிரித்தானியாவுக்குள் பயணிப்போருக்கான கொரோனா பரிசோதனைகள் இரத்துச் செய்யப்படுவதாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் ((Boris Johnson)) உறுதிப்படுத்தியுள்ளார்.
முழுமையாக கொவிட் தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கான பரிசோதனைகளே இவ்வாறு இரத்துச் செய்யப்படுவதாக பிரதமர் கூறியுள்ளார்.
பிரித்தானியா வணிகம் மற்றும் பயணங்களுக்காக திறந்திருக்கும் நாடு என்பதை வெளியுலகத்திற்கு காட்ட, பயணக் கட்டுப்பாடுகளில் முக்கிய மாற்றம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பிரித்தானிய கொரோனா புள்ளிவிவரங்கள் குறைந்து வரும் நிலையில், இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு அவதானம் செலுத்தியுள்ளோம் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பிரித்தானியா வருவோர் இரண்டு தடுப்பூசி பெற்றிருந்தால் கொரோனா பரிசோதனைகள் எடுக்க வேண்டியதில்லை என பிரதமர் கூறியுள்ளார்.
ஆனால், இந்த மாற்றும் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பது தொடர்பான திகதியை பிரதமர் கூறவில்லை. ஆனால் இது குறித்து மேலதிக விபரங்கள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
