தொடரும் கூட்டுப் பயிற்சிகள் - கொரிய தீபகற்பத்தில் அதிகரித்துள்ள பதற்றம்!
அணுவாயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் என்பவற்றின் மூலம் வடகொரியா தனது அயல் நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது.
இருப்பினும், இதற்கு பதிலளிக்கும் முகமாக தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் நட்பு நாடான அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சிகளை நடத்தி வருகின்றது.
ஏவுகணை பாதுகாப்பு பயிற்சி
தென்கொரியா, ஜப்பான் மாற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டு இராணுவ பயிற்சியினால் கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
தென்கொரியாவின் கிழக்கு கடல் பகுதிகளில் 3 நாடுகளின் கடற்படை வீரர்கள் இணைந்து ஏவுகணை பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பயிற்சிகளுக்கு பதிலளிக்க வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் மேலும் வலுவடையலாம்.
