குறைவடையும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் - நாளை முதல் நடைமுறை
Sri Lanka
Economy of Sri Lanka
By Dharu
நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 25 ரூபாவினாலும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 15 ரூபாவினாலும், உள்ளூர் சிவப்பு அரிசி கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
நாளை முதல்
நாளை (2) முதல் உள்ளூர் சிவப்பு அரிசி ஒரு கிலோ 169 ரூபாவிற்கும், ஒரு கிலோ கோதுமை மா 230 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய முடியும் எனவும் லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்