அத்தியாவசியப் பொருட்களில் மோசடி! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் அத்தியாவசியப்பொருட்கள் உற்பத்தியில் நிறை மோசடிகள் நடப்பதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே குற்றம் சாட்டியுள்ளார்.
பிஸ்கட், சவர்க்காரம் பற்பசை, மிளகாய்த் தூள் மற்றும் மசாலா தூள் போன்ற பொருட்களில் இந்த நிறை மோசடிகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, எடையைப் பொருட்படுத்தாமல் விலை குறைவாக இருப்பதாக நினைத்து கொள்வனவு செய்வோர் பணத்தை இழக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிக விலைக்கு விற்பனை

இந்த நிறை குறைந்த பொருட்களை சலுகை என்று விளம்பரம் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்வதாகவும், ஆனால் சாதாரண விலையுடன் ஒப்பிடுகையில், அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், சவர்க்காரம், மிளகாய் போன்ற மசாலாப் பொதிகள் மற்றும் சில வகையான பிஸ்கட்களும் இவ்வாறு ஏமாற்றி விற்பனை செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.