அரசியல் தீர்வுக்கான பயணம் - தமிழ் அரசியல்வாதிகளுக்கு அரசாங்கம் அறிவுரை
தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைக் களைந்து விட்டு தமிழ் மக்களின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அதிபர் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “அதிபர் ரணில் விக்ரமசிங்க அவசரப்பட்டு அரசியல் தீர்வைக் கொண்டு வர முயலவில்லை.
தேசிய இனப் பிரச்சினை
தேசிய இனப் பிரச்சினையால் தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அரசியல் தீர்வை காண்பதற்கான பயணத்தில் அவர் இறங்கியுள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைக் களைந்து விட்டு தமிழ் மக்களின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
அரசியல் தீர்வைக் காண்பதற்கான பயணத்தில் அதிபருடன் அவர்கள் கைகோர்க்க வேண்டும்.
நல்லிணக்கம் தொடர்பான பல நிறுவனங்கள் எனது அமைச்சின் கீழ் உள்ளன. அந்த நிறுவனங்கள் தங்கள் பணிகளை துரிதமாக முன்னெடுக்கின்றன” - என்றார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
