காசா போர் : கனேடிய பிரதமர் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு
Justin Trudeau
Israel-Hamas War
Gaza
By Sumithiran
காசாவில் மனிதாபிமான பாதை திறக்கப்பட வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார்.
2.3 மில்லியன் மக்கள் முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ளதாகவும் அதிகரித்து வரும் இக்கட்டான சூழ்நிலையைத் தீர்க்க அவர்களுக்கு அவசர உதவி தேவை என்று அவர் கூறினார்.
"போர்களுக்குக் கூட விதிகள் உண்டு"
தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமையை கனடா ஆதரிக்கிறது ஆனால் "போர்களுக்குக் கூட விதிகள் உண்டு" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஹமாஸ் பாலஸ்தீனிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை
"பயங்கரவாதம் எப்போதும் பாதுகாப்பற்றது, ஹமாஸின் பயங்கரவாத செயல்களை எதுவும் நியாயப்படுத்த முடியாது. ஹமாஸ் பாலஸ்தீனிய மக்களையோ அல்லது அவர்களின் நியாயமான அபிலாஷைகளையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் ஐந்து கனேடியர்கள் கொல்லப்பட்டதுடன் மூன்று பேரை காணவில்லை.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி