மட்டக்களப்பில் சிங்களப் பாடசாலை அபிவிருத்தி : முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நேரில் சென்று உதவி!
மட்டக்களப்பு - புன்னக்குடா (Batticaloa - Punnakkuda) பகுதியில் உள்ள கிழக்கு மாணாக சிங்கள பாலர் பாடசாலைக்கான மலசலகூடத்தொகுதி மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா என்பனவற்றை திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு - திம்புலாகல விகாராதிபதி சிறி தேவலங்கார (Sri Devalangara) அவர்களின் வேண்டுகோளுக்கமைய "ரொஷான் மஹாநாம" அமைப்பின் நிதிப்பங்களிப்பில் - கிரான் தொப்பிகல 232 படையணி பிரிவின் ஒருங்கிணைப்புடன் குறித்த பாலர் பாடசாலைக்கான மலசலகூடத் தொகுதி மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா என்பன இன்று (05) திறந்து வைக்கப்பட்டது.
இந்த கட்டடத்தொகுதிகள் இரண்டும் சுமார் 52 இலட்சத்து 25ஆயிரம் ரூபா (525000.00) செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்களுக்கான பரிசில்கள்
இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு அதிதிகளாக திம்புலாகல விகாராதிபதி சிறி தேவலங்கார(Sri Devalangara) , "ரொஷான் மஹாநாம" அமைப்பின் தலைவர் ரொஷான் மஹாநாம (Roshan Mahanama), முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரொமேஸ் கலுவிதாரன (Romesh Kaluvitharana), சமிந்த வாஸ்(Samintha vas), மேஜர் ஜென்ரல் கொமாடுவ பெரேரா (Komaduwa Perera), தொப்பிகல 232 இராணுவ படைப்பிரிவின் பிரிவின் தளபதி ஆர்.பீ.எஸ்.பிரசாத் (R.P.S Prashath) ஆகியோருடன் இராணுவ அதிகாரிகள், புன்னக்குடா கிராம மக்கள், பெற்றொர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், வரவேற்பு நடனம் ,சிறுவர் நடனம், என்பனவும் இடம்பெற்றதுடன், அதிதிகளினால் சிறுவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |