ஊழல் குற்றச்சாட்டு -மலேஷிய முன்னாள் பிரதமர் கைது
மலேசிய முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று நண்பகல் முன்னாள் பிரதமர் விசாரணைக்காக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் நேரில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
பிணையில் விடுவிப்பு
இதேவேளை, கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் நாளை அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனக்கு எதிராக குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
பண மோசடி, சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக அவர் மீது குற்றம்சாட்டப்படும் என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் கூறியது.
மற்றுமொரு முன்னாள் பிரதமர் சிறையில்
2018 பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்த பிறகு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். ஓகஸ்ட் 2022 இல் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் மார்ச் 2020 இல் அவருக்குப் பிறகு பிரதமராகப் பதவியேற்ற முகைதீன் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது.
