காவல்துறை மைதானத்திற்குப் பெண்ணுடன் வந்த கருணா...! வெடித்த சர்ச்சை - அம்பலமான உண்மைகள்
முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் கருணா அமைச்சராக இருந்த போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
காவல் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு கருணா சென்ற போது நடந்த சம்பம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டு இருந்தார்.
இதில் மேலும் தெரிவித்திருந்த அவர், “எனக்கு நினைவிருக்கும் வகையில் 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில், நான் காவல்துறை விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அப்போது அமைச்சராக இருந்தார்.
அவருக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
அவர் மாலை வேளையில் ஒரு பெண்ணுடன் காவல்துறை விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வருவார்” என தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில் யார் அந்த பெண் என தற்போது கேள்வி எழுப்பப்படுகின்ற நிலையில் இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு ஐபிசி தமிழின் அப்பால் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்