ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானதா: எழுந்துள்ள குற்றச்சாட்டு
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வட்ஸ்அப் ஊடாக பரிமாறப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அநுராதபுரம் (Anuradhapura) பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இருந்து குறித்த வினாத்தாள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது.
காவல்துறை விசாரணை
அநுராதபுரம் - அலவ்வா பகுதியில் பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவரால் குறித்த வினாத்தாள்கள் வாட்ஸ்அப் ஊடக அனுப்பப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தெரடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாடெங்கிலும் நேற்றைதினம் (15) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் அமைதியான முறையில் நடைபெற்றது.
குறித்த பரீட்சைக்கு சுமார் 3 இலட்சத்து 23 ஆயிரத்து 879 மாணவர்கள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |