மக்களுக்கு அதிர்ச்சி தகவல் : 97 வகையான பொருட்களுக்கு வற் வரி!
வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த138 வகையான பொருட்களிலிருந்து 97 வகையான பொருட்களுக்கு வரி விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதனை நேற்று(08) நாடாளுமன்ற விவாதத்தின் போது ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.
இதுவரையில் 138 வகையான பொருட்களுக்கு வற் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
இதனால் நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதத்திற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே 138 வகையான பொருட்களிலிருந்து 97 பொருட்களுக்கு வரி விலக்கை நீக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீத வருமான அதிகரிப்பு அதாவது 378 பில்லியன் ரூபா வருமானம் பெற முடியும் எனவும் நாட்டிற்கு தேவையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 13 மணி நேரம் முன்
