மீண்டும் ஆரம்பிக்கவுள்ள கர்ப்பிணிகளுக்கான சத்துணவுப் பொதி விநியோகம்!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Government Of Sri Lanka
By pavan
இலங்கையில் கற்பிணித் தாய்மார்களுக்கான சத்துணவுப் பொதி விநியோக திட்டம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
12 வாரங்கள் நிறைவடைந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 10 மாத காலத்திற்கு தலா 2 ஆயிரம் ரூபா மதிப்பிலான சத்துணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் உணவுப் பொருட்கள் சீராக கிடைக்காததால் கடந்த ஜூன் மாதம் முதல் இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
நாடளாவிய ரீதியில் விநியோகம்

எனினும், தற்போது பல மாவட்டங்களில் மீண்டும் போஷாக்கு பொதிகள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில வாரங்களில் நாடளாவிய ரீதியில் விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி