வெடித்துச் சிதறிய பெற்றோல் பவுசர்! பலர் உடல் கருகிப் பலி - வெளியேறிய லெபனான் இராணுவம்
Death
Army
Lebanon
By Chanakyan
லெபனானின் வடக்கு பிராந்தியமான அக்காரில் இராணுவம் பறிமுதல் செய்து வைத்திருந்த பெற்றோல் பவுசர் திடீரென வெடித்து சிதறி தீப்பிடித்தது.
இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 80 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இராணுவம் பறிமுதல் செய்த பவுசர் வெடித்ததாக அதிகாரப்பூர்வ தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெற்றோல் நிரப்புவதற்காக பவுசரைச் சுற்றி திரண்டிருந்த பொதுமக்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இந்த மோதலுக்கு முன்பாக இராணுவம் அந்த பகுதியை விட்டு வெளியேறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி, கடுமையான எரிபொருள் பற்றாக்குறை, நீண்டநேர மின்வெட்டு போன்றவற்றால் நாடு தத்தளித்து வரும் நிலையில், இந்த துயரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி