ஈரானின் உயிர்நாடியை குறிவைத்தது அமெரிக்கா

Donald Trump Iran Iran-Israel War Iran-US Conflict
By Sumithiran Apr 07, 2026 02:17 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

கார்க் தீவில் உள்ள "சில இராணுவ இலக்குகளைத் தாக்கும்" நோக்கங்கள் குறித்து தனக்குத் தெரிந்திருந்ததாகவும், அமெரிக்கா "அவ்வாறு செய்துள்ளது" என்று நம்புவதாகவும் துணை ஜனாதிபதி வான்ஸ் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையைமீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இன்றிரவு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஈரான் பதிலளிக்கவில்லை என்றால், அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் "முழுமையாக இடிக்கப்படும்" என்று எச்சரித்துள்ள டொனால்ட் டிரம்பின் வியூகத்தில் இந்தத் தாக்குதல்கள் ஒரு மாற்றத்தைக் குறிக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்

அமெரிக்காவால் "மிகப் பெரிய வலியை" ஏற்படுத்தும் திறன் உள்ளது 

ஈரான் "உலகிற்கு முடிந்தவரை அதிக பொருளாதார வலியை ஏற்படுத்த" முயற்சிக்கிறது, ஆனால் அமெரிக்காவால் "மிகப் பெரிய வலியை" ஏற்படுத்தும் திறன் உள்ளது என்று வான்ஸ் கூறினார்.

ஈரானின் உயிர்நாடியை குறிவைத்தது அமெரிக்கா | Explosions On Iran S Strategic Kharg Island

இன்றிரவு 20:00 EDT (புதன்கிழமை 00:00 GMT / 01:00 BST)க்குள் ஈரானியர்களிடமிருந்து அமெரிக்கா ஒரு பதிலைப் பெறும் என்று தான் நம்புவதாகவும் "அவர்கள் சரியான தகவலை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்." என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்

இதேவேளை ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதை ஒரு அமெரிக்க அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரானின் உயிர்நாடியை குறிவைத்தது அமெரிக்கா | Explosions On Iran S Strategic Kharg Island

அமெரிக்கா இதற்கு முன்னர் மார்ச் மாதம் இந்தத் தீவைத் தாக்கியது, அப்போது இராணுவ இலக்குகள் "முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன" என்று ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார்.

இன்று, பெயர் குறிப்பிடப்படாத அந்த அதிகாரி, இரவு நேரத் தாக்குதலில் எண்ணெய் உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்படவில்லை என்று கூறினார்.

கார்க் தீவில் ஈரானின் பொருளாதார உயிர்நாடியாகக் கருதப்படும் ஒரு முக்கிய எண்ணெய் முனையம் அமைந்துள்ளது. தீவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற படைகளை அனுப்பக்கூடும் என்று ட்ரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

முதலாம் இணைப்பு

  ஈரானின் முக்கியத்துவம் மிக்க கார்க் தீவில் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தீவிலிருந்துதான் நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து எண்ணெயும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என ஈரானின் அரை அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான மெஹ்ர் தெரிவித்துள்ளது.

"பல வெடிப்புகள்" நிகழ்ந்ததாக மெஹ்ர் செய்தி வெளியிட்டது, ஆனால் மேலதிக விவரங்களை வழங்கவில்லை.

ட்ரம்பின் அச்சுறுத்தல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பலமுறை அந்தத் தீவின் மீது குண்டு வீசுவதாகவோ அல்லது அதைக் கைப்பற்றுவதாகவோ அச்சுறுத்தி வருகிறார்.

ஈரானின் உயிர்நாடியை குறிவைத்தது அமெரிக்கா | Explosions On Iran S Strategic Kharg Island

மார்ச் 30 அன்று, ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், "மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை அமெரிக்காவால் அழிக்க முடியும்" என்று அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதி நிமிடங்களில் போர்..! உயிரைத் தியாகம் செய்வோம் - சூளுரைத்த ஈரான் ஜனாதிபதி

இறுதி நிமிடங்களில் போர்..! உயிரைத் தியாகம் செய்வோம் - சூளுரைத்த ஈரான் ஜனாதிபதி

ஈரானில் உச்சக்கட்ட படபடப்பு...! அணுமின் நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி - எட்டு மணி வரை ட்ரம்பின் கெடு

ஈரானில் உச்சக்கட்ட படபடப்பு...! அணுமின் நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி - எட்டு மணி வரை ட்ரம்பின் கெடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026