தென்பகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் மோசடி அம்பலம்
Parliament of Sri Lanka
By Vanan
சட்டக் கல்லூரிக்கான நுழைவுப் பரீட்சையில் தென்மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மோசடி செய்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை கடுமையான நிபந்தனைகளின் கீழ் நடத்தப்படும் நிலையில், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், பரீட்சைக்கான விடைகளை பிரதி செய்து எழுதியதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணையைத் தவிர்க்க கடும் முயற்சி
இதன்படி, அரசியல்வாதிகளின் பின்னால் சென்று இந்த விசாரணையைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவிடம் செய்தியாளர்கள் வினவிய தனக்கும் இது தொடர்பான சில செய்திகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்