தனிநாட்டுப் போராட்டத்திற்கு வித்திட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை…

IBC Tamil Sri Lankan Tamils Sri Lanka
By Theepachelvan Jan 10, 2025 10:32 AM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: Theepachelvan

ஆராய்ச்சி என்பது அறிதல் என்கிற கல்விச் செயற்பாடு. இலங்கையில் தமிழர்களின் அறிதலையும், கல்விச் செயற்பாட்டையும்கூட அடக்கி ஒழிக்க முனைகின்ற கொடுமைகள் நடந்துள்ளன என்பதற்கு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை சாட்சியாக இருக்கிறது.

பின்னைய நாட்களில் மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் படுகொலை செய்யப்பட்டதும், கல்வி நிலையங்கள்மீது பல்வேறு வகையான தாக்குதல்கள் இடம்பெற்றதும் இதன் ஒரு வெளிப்பாடே ஆகும்.

கல்விமீதும் அறிவுமீதும் மேற்கொள்ளும் ஒடுக்குமுறை பாரிய பின் விளைவுகளை உருவாக்கும். அந்த அடிப்படையில்தான் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை தமிழீழம் என்கிற தனிநாட்டுப் போராட்டத்திற்கு வித்திட்டது. 

லசந்தவுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவாரா அநுர?

லசந்தவுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவாரா அநுர?

 

தனிநாயகம் அடிகளாரின் முயற்சி

தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட  உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது.

26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

தனிநாட்டுப் போராட்டத்திற்கு வித்திட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை… | World Tamil Studies Conference Massacre Article

1964 ஜனவரி ஏழாம் திகதி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் முதல் சந்திப்பு டில்லியில் இடம்பெற்றது. முதலாவது உலகத் தமிழாராச்சி மாநாடு மலேசியாவிலும் இராண்டாவது உலகத் தமிழாராச்சி மாநாடு தமிழகத்திலும் மூன்றாவது மாநாடு பிரான்சிலும் நடைபெற்றது.

பிரான்சில் நடைபெற்ற மாநாட்டில் நான்காவது மாநாட்டை ஈழத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.

இதன்படி நான்காவது உலகத் தமிழாராச்சி மாநாடு 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரை இடம்பெற்றது.

தவத்திரு தனிநாயகம் அடிகளாரினால் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ ரீதியாக நிகழ்வு தொடங்கப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக பேசிய அநுரகுமார : இன்று நழுவுவது ஏன் !

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக பேசிய அநுரகுமார : இன்று நழுவுவது ஏன் !

அறிவுமீதான அடக்குமுறை

சைவமும் தமிழழும் தழைத்தோங்கிய ஈழத்தில், இஸ்லாமியத் தமிழ், கிறீஸ்வதத் தமிழ் இலக்கியங்களால் செழுமை பெற்ற ஈழத்தில், தனித்துவமான பண்பாடும் பாரம்பரியமும் தொன்மையும் மிக்க ஈழத்தில், உலகத் தமிழராயச்சி மாநாடு பெரும் எழுச்சியாய் நடந்தது.

யாழ் நகரமே பாரம்பரிய பண்பாட்டின் கோலத்தின் காட்சியில் இருந்தது. தாம் பேசும் மொழிக்கு தமிழர்கள் விழா எடுத்தனர். ஈழத்தில் இன ஒடுக்குமுறைக்கான கருவியாக துப்பாக்கிள் மாத்திரமின்றி மொழியும் பிரயோகிக்கப்பட்டது.

தனிநாட்டுப் போராட்டத்திற்கு வித்திட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை… | World Tamil Studies Conference Massacre Article

1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது மொழி ஒடுக்குமுறைக்காகவே என்பது வரலாறு. ஈழத் தீவில் தமிழ் மக்களின்  அறிவையும் மொழியையும் ஒடுக்கவே தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

உலகத் தமிழராயச்சி மாநாடு என்பது உலகளவில் தமிழ் மொழி குறித்த ஆராயச்சி தொடர்பானது. ஆனால் அம் மாநாட்டை கண்ணுற்ற அன்றைய அரசு,  ஈழத் தமிழ் இனத்தின்மீது இனவெறி வன்முறை கொண்டு தாக்கியது.

அதுவரை காலமும் ஈழத்தில் தமிழ் மக்கள் தமது அடையாளத்தின் பொருட்டு, எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்களோ, அப்படியே இம் மாநாட்டில் கலந்து கொண்டவர்களையும் படுகொலை செய்து உலகத் தமிழாராச்சி போன்ற பண்பாட்டு செயல்களுக்கு ஈழ மக்களுக்கு உரிமையில்லை என்று காட்ட முற்பட்டது. 

தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்

தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்

வித்தியானந்தனின் தலைமை

இந்தப் படுகொலையின் பின்னணியில் ஆக்கிரமிப்பு அரசியலே இருந்தது. உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் அரசியல் தலையீடுகள், நோக்கங்கள் அற்ற வகையிலேயே இடம்பெற்று வந்தது.

யாழில் இடம்பெறும் மாநாட்டிற்கு அன்றைய பிரதமர் சிறிவோ பண்டார நாயக்காவை அழைக்க வேண்டும் என்று தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கான கிளையில் உள்ள சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

தனிநாட்டுப் போராட்டத்திற்கு வித்திட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை… | World Tamil Studies Conference Massacre Article

ஆனால் பெரும்பான்மையானவர்கள் அதை மறுத்துள்ளனர். இதனால் சிறிமாவுக்கு ஆதரவானவர்கள் கிளையிலிருந்து விலகி மாநாட்டை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

தமிழாராய்ச்சி மன்றத்தின் அகிலத் தலைவர் மாநாட்டை நடத்துதலே மரபாக இருந்தது. இந்த நிலையில் கிளையை விட்டு சிறிமா ஆதரவாளர்கள் விலகினர்.

இதையடுத்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் இலங்கை கிளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்டடக்கலை விற்பன்னர்களாகிய துரைாஜாவும், கோபாலபிள்ளை மகா தேவாவும் செயலாளர், பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார்கள்.

தன்னை விருந்தினராக அழைக்காமை காரணமாக சிறிமாவோ அரசு மாநாட்டை குழப்பத் தொடங்கியது. இதனையடுத்து அரச பாடசாலை மண்டபங்கள் மறுக்கப்பட்டன.

அத்துடன் அப்போது மேயராக இருந்த சிறிமாவின் ஆதரவாளர் அல்பிரட் துரையப்பா யாழ் திறந்த வெளியரங்களில் நிகழ்வுகளை நடத்தவும் அனுமதி தர மறுத்தார். 

விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !

விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !

சிறிமா அரசின் திட்டம்

இந்த மாநாட்டை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்று நினைத்த சிறிமா அரசு, மாநாடு தொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்தது.

ஆனால் இலங்கைத் தீவில் உள்ள தமிழ் திரைமாளிகளில் மாநாடு குறித்த செய்திகள் திரையிடப்பட்டன. இதனால் செய்தி பரவலை அரசால் தடுக்க முடியவில்லை.

தனிநாட்டுப் போராட்டத்திற்கு வித்திட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை… | World Tamil Studies Conference Massacre Article

அத்துடன் உலக நாடுகளில் இருந்து வந்த தமிழ் அறிஞர்களை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பியது அரசு. சர்வதேச தமிழ் அறிஞர்கள் திருப்பி அனுப்பட்ட செய்திகள் இலங்கை அரசின் ஜனநாயக மறுப்புக் கோர முகத்தை உலகிற்கு அம்பலம் செய்தது.

இலங்கை  அரசின் அடக்குமுறைகளைத் தாண்டி, மாநாடு தனியாகம் அடிகளாரால் வைபவ ரீதியாக தொடங்கப்பட்டது. இதற்காக அவர் பல அச்சுறுத்தல்களை, சவால்களை எதிர்கொண்டார்.

மாநாட்டு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும், றிமர் மண்டத்திலும் நடக்க, கலை நிகழ்ச்சிகள் யாழ் திறந்தவெளி அரங்கிலும் நடைபெற்றன.

யாழ் சுண்டுக்குளி மகளீர் கல்லூரியில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி இடம்பெற்றது. ஆறு நாட்களாக யாழ்ப்பாணமே தமிழ் மொழிப் பண்பாட்டுக் கோலத்தில் மிளிர்ந்தது. மக்கள் எழுச்சியாய் திரண்டனர். இதனை கண்ணுற்ற சிங்கள அரசுக்கு பொறுத்துக் கொள்ள இயலவில்லை.  

மனித உரிமைகள் தினம் மெய்யான அர்த்தத்துடன் அனுஷ்டிக்கப்படுகிறதா !

மனித உரிமைகள் தினம் மெய்யான அர்த்தத்துடன் அனுஷ்டிக்கப்படுகிறதா !

எழுச்சிக்கோலத்தில் ஈழம்

தமிழ் கிராமங்கள் எங்கும் தமிழ் பண்பாட்டை வலியுறுத்தும் அலங்கார ஊர்திப் பவனிகள் இடம்பெற்றன. இறுதிநாளன்று முத்திரைச் சந்தியை கடந்து வந்த ஊர்தி பவனியை இலங்கை காவல்துறையினர் மறித்தபோது அந்த இடத்திலேயே அமர்ந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை கண்ணுற்ற காவல்துறையினர்  போராட்டத்திற்குப் பணிந்தனர். தம்மால் தடுக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் அலங்கார ஊர்திப் பவனியை செல்ல அனுமதித்தனர்.

தனிநாட்டுப் போராட்டத்திற்கு வித்திட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை… | World Tamil Studies Conference Massacre Article

எனினும் அதற்கான பலி வாழங்கலுக்காக காத்திருந்தனர். இந்த நிலையில் மாநாட்டில் கலந்துகொண்ட சர்வசேத அறிஞர்களை வழி அனுப்பும் நிகழ்வு ஜனவரி 10 அன்று யாழ் திறந்தவெளி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த நிகழ்வை நடத்த சிறிமாவின் ஆதரவாளர் அல்பிரட் துரையப்பா மறுத்தமை காரணமாக யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.வழியனுப்ப சுமார் 50ஆயிரம் பேர் வந்திருந்தனர்.

மண்டபம் நிரம்பிய நிலையில் வெளியிலும் மக்கள் திரண்டு இருந்தனர்.  பாதையை விட்டு வெளியில் புல் தரையிலிருந்து மக்கள் நிகழ்வை பார்வையிட்டனர். பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. 

இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…

இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…

அழுகுரலும் கண்ணீரும்

இந்த நேரத்தில்தான் அங்கு வந்த ஸ்ரீலங்காப் பொலிஸார் ஏற்கனவே திட்டமிட்டபடி வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். தம்மை புறக்கணித்தமை மற்றும் தமிழ் நிலத்தின் பண்பாட்டு எழுச்சி கண்டு சிங்கள அரசு பெரும் இனவெறியில் இருந்தது.

இதனால் இந்த நிகழ்வில் எப்படியாவது வன்முறையை தோற்றுவிப்பதற்காகவே அனுராதபுரத்திலிருந்து கலகம் அடக்கும் காவல்துறை என்ற வன்முறைக் குழு கொண்டுவரப்ட்டது.

தனிநாட்டுப் போராட்டத்திற்கு வித்திட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை… | World Tamil Studies Conference Massacre Article

இந்த நிலையில்தான் யாழ். காவல்துறை அதிபர் சந்திரசேகர தலைமையில் மாநாட்டிற்கு வந்திருந்த அப்பாவிப் பொதுமக்களை பொலிஸார் கடுமையாக தாக்கினர்.

குண்டாந்தடியடிப் பிரயோகம், அளவற்ற கண்ணீர் குண்டுப் புகைப்பிரயோகம் என்பன நிகழ்த்தப்பட்டதுடன், துப்பாக்கிப் பிரயோகங்களும் நிகழ்த்தப்பட்டன.

துப்பாக்கிப் பிரயோகங்களால் மின்கம்பிகள் அறுந்து வீழந்தன. குறி பார்த்துச் சுட்ட மின் கம்பிகள் வீழ்ந்ததில் ஒன்பதுபேர் அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர்.

பெண்களும் வயது முதிர்ந்தவர்களுமாக பல நூற்றுக் கணக்கானவர்கள் நெரிசலில் சிக்கி காயமுற்றனர். அலை கடலென மக்கள் திரண்டு மாநாட்டிற்காக விழாக்கோலம் பூண்ட யாழ் நகரம் அழுகுரலும் கண்ணீருமாய் காட்சி அளித்தது. 

போரின் அகக்  காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !

போரின் அகக்  காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !

கறுப்புத் தைப்பொங்கல்

இந்த வன்முறைகள் உலக அளவில் இலங்கை அரசின் கொடிய இன ஒடுக்கல் முகத்தை அம்பலம் செய்தது. இதனால் விசாரணை குழு ஒன்றை அரசு அமைத்தது.

ஆனால் சிறிலங்கா காவல்துறை தண்டிக்கப்படவில்லை. அவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவும் இல்லை. தமிழ் மக்களுக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு சம்பிரதாயபூர்வ விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு நீதி மறுக்கப்பவடுதுபோல தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளுக்கும் நீதி மறுக்கப்பட்டது.

தனிநாட்டுப் போராட்டத்திற்கு வித்திட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை… | World Tamil Studies Conference Massacre Article

ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சங்களின் மனதில் ஆறாத வடுவாக இந்தப் படுகொலை நிலைத்தது. இப்படுகொலை நடைபெற்ற குறித்த ஆண்டின் தை மாதம், கறுப்பு மாதாகமாக நினைவுகொள்ளப்பட்டது.

எவருடைய வீட்டிலும் தைப்பொங்கல் இடம்பெறாது போயிற்று. அந்தளவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுத் துயரமாக இப்படுகொலை நடைபெற்றது.

அத்துடன் சிங்கள இன வெறி அரசு தமிழ் மக்களை அவர்களின் மொழி சார்ந்த ஒரு பாரம்பரிய நிகழ்வொன்றை நடத்த அனுமதியாது என்ற கோர ஒடுக்குமுறை குணாம்சத்தை உலகிற்கு எடுத்துக் கூறியது.

இலங்கை அரசு தமிழ் மக்களை அரசியல் ரீதியாக ஒடுக்குவதற்கும் அப்பால், மொழி, பண்பாட்டு ரீதியாகவும் தீவிரமாக ஒடுக்குகிறது என்பதை இந்த நிகழ்வு உலகிற்கு தெளிவுபடுத்தியது.

இதுவே பின் வந்த காலத்தில் தனித் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அடிகோலிய காரணங்களிலும் ஒன்றானது. ஆனால் இன்றும் பள்ளிக்கூடங்கள்மீது விசாரணை, கண்காணிப்பு.

எழுத்தாளர்கள்மீது கண்காணிப்பு விசாரணை என்று ஶ்ரீலங்கா அரசு அறிவுமீதான அடக்குமுறையைத் தொடர்ந்துகொண்டிருப்பதே துயரம்.

தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை : ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி !

தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை : ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி !

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 10 January, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புளியங்குளம், Scarborough, Canada

15 Mar, 2025
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்