போரின் அகக்  காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !

Sri Lanka Sri Lanka Final War
By Theepachelvan Dec 03, 2024 11:00 PM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

போரினால் ஏற்பட்ட புறக்காயங்கள் ஆறியபோதும் இன்னமும் அகக் காயம் ஆறாமல் இருக்கிறது இன்றும் உலக மாற்றுத் திறனாளிகள் நாளில் தன் ஒற்றைக் காலை இழந்த ஒரு ஈழ விடுதலைப் போராளியின் காணொளிப் பதிவைப் பார்த்தபோது போரின் அகக் காயங்களுடன் அவர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. ஈழத் தமிழ் நிலத்தில், எல்லா வகையிலும் நடந்த இனப்படுகொலையின் சாட்சிகளால் நிறைந்தே இருக்கிறது.

போரில் அங்கங்களை இழந்து நம் கண் முன்னால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், நடந்த இனப்படுகொலைப் போரின் சாட்சிகளாக கொள்ளப்பட வேண்டியவர்கள். எங்கள் நகரங்களில் கைகளை இழந்தவர்களும், கண்களை இழந்தவர்களும் கால்களை இழந்தவர்களும் தினமும் விலத்திச் செல்கின்றனர்.

போரின் காயத் தழும்புகள் நிறைந்த சனங்களைக் கண்டபடிதான் வாழ்கிறோம். மனக்காயங்களுடனும் உடல் காயங்களுடனும் வாழ்கின்ற மனிதர்களால் ஈழம் நிரம்பியிருக்கிறது.

தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை : ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி !

தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை : ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி !

பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் தினம்

டிசம்பர் 3ஆம் திகதி உலக மாற்றுத் திறனாளிகள் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உலகம் எங்குமுள்ள மாற்றுத் திறனாளிகளைப் புரிந்து கொள்வதுடன் அவர்களுக்கான உரிமைகளையும் மேன்மைகளையும் வழங்கும் நோக்கில் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது. பன்னாட்டு அமைப்பான ஐ.நா 1981ஆம் ஆண்டை உலக மாற்றுத் திறனாளிகள் ஆண்டாக அறிவித்திருந்தது. அத்துடன் 1991ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 3ஆம் நாளை உலக மாற்றுத் திறனாளிகள் நாளாக ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ளதுடன் ஆண்டுதோறும் இந்த நாளில் மாற்றுத் திறனாளிகள் குறித்த கவனமும் விழிப்புணர்வும் வலியுறுத்தப்படுகிறது.

போரின் அகக்  காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் ! | Sri Lanka Final War Article Disabilities People

மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசாங்கமும், சேவை வழங்கும் நிறுவனங்களும், பெற்றோரும், ஏனைய மனிதர்களும் உதவுவதும், இவர்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல சகல உரிமைகளையும் பெற வைப்பதும் ஒரு சமுதாய கடமையாகும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இந்த நாளின் முதன்மை நோக்காகும். 1991ஆம் ஆண்டில் இருந்து உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகின்ற போதும்கூட, உலகில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் தொடர்ந்தும் சிக்கல்கள் காணப்படுகின்றன. அவர்களுக்கான மேன்மைகளை இந்த நாள் வலியுறுத்தினாலும் நடைமுறையில் அது தோல்வியில்தான் இருக்கிறது.

இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும்

இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும்

மாற்றுத் திறனாளிகளுக்கான சம உரிமைகள்

ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக நாடுகள் ஒன்றிணைந்த ஒரு அரசாக கொள்ளப்பட வேண்டிய பன்னாட்டு நிறுவனமாகும். அந்த அடிப்படையில் ஐ.நா பிரகடனப்படுத்திய ஒரு தினத்தை உலக நாடுகள் யாவும் முறையாக கடைப்பிடிக்க வேண்டியது அந்நாடுகளின் கடமையாகும். ஆனால் மாற்றுத் திறனாளிகள் தினத்தை பெரும்பாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாத்திரமே கொண்டாடுகின்றன அல்லது நினைவுபடுத்துகின்றன என்றும் அரசுகள் இந்த நாளை பெரும்பாலும் மறந்துவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுவே மாற்றுத் திறனாளிகள் குறித்த அரசின் கரிசனையா என்றும் கேள்வி எழுகிறது.

போரின் அகக்  காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் ! | Sri Lanka Final War Article Disabilities People

என்ற போதும்கூட சில நாடுகளில் அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த நாளை தவறாமல் அனுஷ்டித்து வருகின்றன. மாற்றுத் திறனாளிகளின் நிலையைப் புரிய வைத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களைத் தீட்டி செயற்படுத்தி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. அத்துடன் மாற்றுத் திறனாளிகளின் நிலையை மேம்படுத்துவதற்கான சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள் என்பன ஊடகங்கள் வாயிலாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமைகளை பெற்றுக் கொடுக்கின்ற முயற்சிகள் இடம்பெறுவதையும் அவதானிக்க முடிகிறது.

பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !

பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !

சினிமாவில் மாற்றுத்திறனாளிகள்

இப்படி மாற்றத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகின்ற போதும் கூட உண்மையிலேயே சமூகத்தில் மாற்றுத் திறனாளிகள் மதிக்கப்படுகின்றனரா என்பதை குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. மாற்றுத் தினாளிகள் குழந்தைப் பருவம் முதல் பல்வேறு அவமதிப்புக்களை சந்தித்து வருகின்றனர். பெரும்பாலும் அவர்களின் குறைபாடுகளை பெரும்பாலான சமூகங்கள் கேலியாகவும் அடையாளமாகவும் சொல்லி மனநிலைகளை பாதிக்கச் செய்வதையும் கண்டு வருகின்றோம். மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளைக் கொண்டே அவர்களுக்கு கேலியான பெயர்களைச் சூட்டுவதையும் சராசரி வாழ்வில் காண்கிறோம்.

போரின் அகக்  காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் ! | Sri Lanka Final War Article Disabilities People

குறிப்பாக சினிமா சூழலில் மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கின்ற அணுகுமுறைகள் நிறைந்துள்ளன. அதிலும் தமிழ் சினிமா சூழலில் இது இன்னமும் அதிகமாக உள்ளது. குறைபாடுகளை வைத்து நகைச்சுவைக் காட்சிகளை வைப்பது, குறைபாடுகளைக் கொண்டு பெயர் சூட்டுவது என்று சினிமாவில் இத்தகைய வெளிப்பாடுகளை மேற்கொள்வதுதான் சமூகத்தில் மாற்றுத் திறனாளிகள் குறித்த கேலிப் போக்குகளை விதைக்கின்றது. இதேவேளை மாற்றுத் திறனாளிகளின் மேன்மையையும் உயர்வையும் சித்திரிக்கின்ற பெயர் சொல்லக் கூடிய சில திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. அவர்களை முன்னிலைப்படுத்தியும் அவர்களது வாழ்வை மேம்படுத்தும் வகையிலும் சினிமாத்துறையில் படங்கள் உருவாகுவது மாற்றுத் திறனாளிகள் குறித்த நல்ல புரிதலை உருவாக்கும்.

துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..!

துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..!

சாதனை செய்யும் மாற்றுத் திறனாளிகள்

கிளிநொச்சியில் போரில் இரு கைகளையும் ஒரு கண்ணையும் இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர், ஒரு சராசரி மனிதன் செய்கின்ற அத்தனை வேலைகளையும் செய்வதுடன், அதனைக் கடந்தும் உழைத்து வருவதைக் காணமுடிகின்றது. எழுத்தாளர் வெற்றிச்செல்வி போரில் ஒரு கண்ணையும் ஒரு கையையும் இழந்தவர். ஆனால் அவர் தன் எழுத்துக்களால் ஆற்றும் பணி என்பது ஆயிரம் கைகளாலும் ஆயிரம் கண்களாலும் செய்கின்ற பணிக்கு ஒப்பானது. இதைப் போல ஈழத்தில் போரில் மாற்றுத் திறனாளிகள் ஆக்கப்பட்ட பலர் சாதித்து வருகின்றார்கள்.

போரின் அகக்  காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் ! | Sri Lanka Final War Article Disabilities People

இதேவேளை, எமது சூழலில் பல பிள்ளைகள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். போரில் குழந்தைப் பருவத்தில் கை, கால்களை இழந்து, கண்களை இழந்து இன்றும் மாணவர்களாக கல்வி கற்று வருகிறார்கள். போரில் இரு கால்களையும் இழந்த பல பல்கலைக்கழக மாணவர்களை பல்கலைக்கழத்தில் சந்தித்திருக்கிறேன். அவர்களில் சிலர் மருத்துவர்களாகவும் வந்துள்ளனர். போரில் அங்கங்களை இழந்த பிறகும்கூட தளராத நம்பிக்கையுடன் கல்வி கற்று, பல்கலைக்கழகம் சென்று இப்போது உத்தியோகங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா !

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா !

இனப்படுகொலையின் சாட்சிகள்

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை பிரகடனப்படுத்தியுள்ள ஐ.நா ஈழம் போன்ற நாடுகளில் மாற்றுத்திறனாளிகள் உருவாக காரணமாகவும் இருந்திருக்கின்றன. ஈழத்தில் போர் நடந்த காலத்தில் அந்தப் போரை தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தனது பணியை செய்யத் தவறியுள்ளது. இதனை பின்னர் ஐ.நா பொதுச்செயலாளரே ஒப்புக்கொண்டதையும் நாம் அறிவோம். மிகக் கடுமையான இனப்படுகொலைப் போர் ஒன்றை உரு தேசம் சந்திக்கின்ற போது அங்கு மிகப் பெரும் உயிரிழப்புக்களையும் அங்க இழப்புக்களையும் சந்திக்க நேரிடும். எனவே மாற்றுத் திறனாளிகள் உருவாகக்கூடாது என்றால் போரை அங்கு தடுக்க வேண்டும்.

போரின் அகக்  காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் ! | Sri Lanka Final War Article Disabilities People

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை பிரகடனப்படுத்தியுள்ள ஐ.நா ஈழம் போன்ற நாடுகளில் மாற்றுத்திறனாளிகள் உருவாக காரணமாகவும் இருந்திருக்கின்றன. ஈழத்தில் போர் நடந்த காலத்தில் அந்தப் போரை தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தனது பணியை செய்யத் தவறியுள்ளது. இதனை பின்னர் ஐ.நா பொதுச்செயலாளரே ஒப்புக்கொண்டதையும் நாம் அறிவோம். மிகக் கடுமையான இனப்படுகொலைப் போர் ஒன்றை உரு தேசம் சந்திக்கின்ற போது அங்கு மிகப் பெரும் உயிரிழப்புக்களையும் அங்க இழப்புக்களையும் சந்திக்க நேரிடும். எனவே மாற்றுத் திறனாளிகள் உருவாகக்கூடாது என்றால் போரை அங்கு தடுக்க வேண்டும்.

இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....

இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 03 December, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025