கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா !

Anura Kumara Dissanayaka Sri Lanka Cardinal Malcolm Ranjith
By Theepachelvan Nov 20, 2024 03:07 AM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்க ( Anura Kumara Dissanayake), பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை கடந்த காலத்தில் சந்தித்தார்.

இதன்போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி நேர்மையான விசாரணைகளை மேற்கொள்வார் என தாம் நம்புவதாக ரஞ்சித் ஆண்டகை கூறியிருந்தார்.

அத்துடன் விசாரணை நடத்தவும் மற்றும் உண்மையை வெளியே கொண்டுவரத் தேவையான அடித்தளத்தை தயார்செய்ய முடிந்த அனைத்தையும் செய்வதாக ஜனாதிபதி தனக்கு வாக்குறுதி அளித்திருந்ததாகவும் பேராயர் கூறியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். பேராயரின் கோரிக்கை மிகுந்த நியாயமும் அவசியமுமானது. அதேபோல ஈழத் தமிழ்  மக்களின் தாயகத்திலும் நடந்த படுகொலைகள் குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று நீதியை வழங்குவதும் அவசியமானது.

நீதி என்பது கொச்சிக்கடை அந்தோனியாருக்கு ஒரு மாதிரியும், மன்னாரில் உள்ள மடுமாதாவுக்கு இன்னொரு மாதிரியும் அமைந்துவிட முடியாதல்லவா?

கோயில்கள் மீது வீசப்பட்ட குண்டுகள்

கடந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் பெரும் இனவழிப்புப் போர்களுக்கு முகம் கொடுத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் ஈழத் தமிழ் மக்களின் தெய்வங்கள் மீதும் அந்தப் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆலயங்கள் மீது குண்டுதாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா ! | Justice For Kochikadai Antony Why Forget Mary

ஆலயங்கள் மீது விமானத்தாக்குதல்கள் பலவும் நடாத்தப்பட்டுள்ளன. ஈழத் தமிழ் மக்களுடன் அவர்களின் தெய்வங்களும் குண்டுத் தாக்குதல்களில் பலியாகவும் காயமடைந்தும் போன கதைகளை நாம் கொண்டிருக்கிறோம். தமிழர்களின் வீடுகள் குண்டுகளால் சல்லடையாக்கப்பட்டது போல ஆலயங்களின் கூரைகளும் சல்லடையாக்கப்பட்டுள்ளன.

ஈழத் தமிழர்கள் கை, கால்களை இழந்தது போல தெய்வங்களின் அங்கங்களும் போரில் பறிக்கப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

நவாலி சென்பீற்றர் தேவாலயம், நந்தாவில் அம்மன் கோயில், மடுமாதா தேவாலயம் என்பன அரச படைகளின் போர்த் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஆலயங்கள் ஆகும்.

இங்கு மக்கள் தஞ்சமடைந்துள்ளார்கள் என்பது தெரிந்தும் போரை தவிர்க்க வேண்டிய ஆலயங்கள்மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதுடன் ஈழத் தமிழ் மக்களின் குருதியால் இந்த ஆலயங்கள் நனைந்துபோயுள்ளன. நந்தாவில் அம்மன் ஆலயத்தில் ஈழத் தமிழ் மக்களின் சிதறிய உடல்கள் காணப்பட்ட காட்சிகளை இன்றளவும் மறந்துவிட முடியாது.

மடுதேவாலயத்தில் கொல்லப்பட்ட சடலங்களை வைத்து குளறி அழும் ஈழச் சனங்களை இன்றளவும் மறந்துவிட முடியாது.

மடு எனும் வடு

நம் நாட்காட்டிகள் ஈழச் சனங்களின் குருதியால் எழுதப்பட்டவை. நாள் தோறும் ஏதோவொரு படுகொலை நினைவில் வந்து விழுகிறது.

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா ! | Justice For Kochikadai Antony Why Forget Mary

நவம்பர் 20 மன்னார் மடு தேவாலயப்படுகொலை இடம்பெற்ற நாள். சிங்கள மக்களிலும் கணிசமான கிறீஸ்வர்கள் இருக்கிறார்கள்.

அவர்களும் வணங்குகின்ற தேவாலயமாக மடு தேவாலயம் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனாலும்கூட இனப்படுகொலை என்று வந்துவிட்டால் எந்த தெய்வத்தையும் படுகொலை செய்ய இலங்கை அரசும் அதன் படைகளும் துணியும் என்பதற்கு சாட்சியாக மன்னார் மடுதேவாலயப் படுகொலைகள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன.

மன்னார் மக்களின் வாழ்வில் மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழ மக்களின் வாழ்விலும் தீருாத வடுவாக மடுத் தேவாலயப்படுகொலை பதிவாகியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மடுப் பிரதேசம் கிறீஸ்தவப் பண்பாடு பரவியிருக்கும் பகுதி. இலங்கையில் மாத்திரமின்றி உலக அளவிலும் பிரசித்தமானது மன்னார் மடு தேவாலயம்.

அத்துடன் ஈழத்தைப் பொறுத்தவரையில் கிறீஸ்தவர்கள் மாத்திரமின்றி சைவர்களும் நம்பிக்கையுடன் வணங்கும் ஆலயமாக மடு தேவாலயம் முக்கியத்துவம் பெறுகின்றது. அத்துடன் பௌத்தர்களும்கூட பெருமளவில் இந்த ஆலயத்தில் நம்பிக்கை கொண்டு வணங்குகின்றனர்.

வரலாறு முழுவதும் இந்த ஆலயம் போர் நடவடிக்கையின் பாதிப்புக்களுக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வந்திருக்கிறது. அடைக்கல மாதாவிடம் அடைக்கலம் புகுந்த மக்களுடன் மாதாமீதும் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதாமீது தொடுத்த போர்

1990ஆம் ஆண்டுக்குப் பிந்தைய காலத்தில் இலங்கை அரச படைகளின் போர் நடவடிக்கை காரணமாக மடுப் பிரதேசத்தில் தஞ்சம் அடைந்தார்கள். 1996களில் வடக்கில் சூழ்ந்த இனவழிப்புப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மன்னார் மடு வரையில் துரத்தயடிக்கப்பட்டனர்.

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா ! | Justice For Kochikadai Antony Why Forget Mary

இக்கால கட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் என பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் மடு தேவாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்தார்கள். மடு தேவாலயச் சூழலே ஒரு அகதிகள் முகாம் போலக் காட்சி அளித்த காலம் அதுவாயிருந்தது.

போரால் நலிவுற்ற மக்கள் மாதாவின் நிழலில் அடைக்கலம் புகுந்திருந்தனர். இந்த நிலையில், மார்ச் மாதம் 22 ஆம் திகதி 1999 ஆம் ஆண்டு ரணகோச என்ற ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் மன்னார் மடுப் பகுதியை கைப்பற்றும் போரை தொடங்கிய இலங்கை அரச படை. ஆனபோதும் அப் போருக்கு அன்றைய மன்னார் ஆயர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

புனித தலமான மடு தேவாலயம் மீது போர் தொடுப்பதை நிறுத்துமாறு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தார் ஆயர். அக் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா மடுவை கைப்பற்றும் போரை தொடர்ந்து நடத்தி முடிப்பதில் கடும் தீவிரம் காட்டினார். மாதா மீது போர் தொடுக்கப்பட்டது.

நிர்க்கதியான மாதா

பல்லின மக்களும் வணங்கும் மாதா தம்மை காப்பாற்றுவாள் என்று நம்பி தமிழ் மக்கள் மாதாவின் ஆலயச் சூழலில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா ! | Justice For Kochikadai Antony Why Forget Mary

1999ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதியன்று, மடு மாதா தேவாலயப் பகுதியை கைப்பற்றும் சண்டையை மூர்க்கமாக மேற்கொண்டனர் இலங்கை அரச படைகள். பாலம்பிட்டி - சின்னப் பண்டிவிரிச்சான் காடுகளின் ஊடாக மடுநோக்கி போர் எடுத்தது இலங்கை இராணுவம்.

இப் போர் நடவடிக்கை காரணமாக பாலம்பிட்டி, தட்சணாமருதமடுப் பகுதி மக்களும் இடம் பெயர்ந்து மடு தேவாலயம் நோக்கி வந்தனர்.

ஒரு கட்டத்தில் இலங்கை அரச படைகள் மடுதேவாலயத்தை ஆக்கிரமித்தனர். மடுதேவாலயத்தில் மக்கள் தஞ்சமடைந்திருந்ததைக் கண்ட இராணுவத்தினர் அவர்களை அங்கிருக்குமாறே சொல்லினர். மக்கள் அங்கு தஞ்சமடைந்திருப்பதை இராணுவத்தினர் பண்டிவிரிச்சானில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினருக்கு அறிவித்திருக்கக்கூடும்.

ஆலய வளாகத்தில் வசித்த மக்களை ஆலய மண்டபங்களில் தஞ்சமடையுமாறு இராணுவத்தினர் கூறியிருந்தனர். இதனை நம்பி மக்களும் ஆலய மண்டபத்தில் தஞ்சம் புகுந்தனர். 20இற்கு மேற்பட்ட கவச வாகனங்கள். எறிகணைகள் வந்து குவியத் தொடங்கின.

துப்பாக்கிப் பிரயோகங்கள் இன்னொரு புறத்தில் சூழ்ந்தன. அன்றிரவு ஒன்பது மணிக்குப் பின்னர் பண்டிவிரிச்சான் இராணுவத் தளத்தில் இருந்தும் செல்கள் வந்து வீழத் துவங்கின. இரவு பதினொரு மணியாக இருந்தது.

அப்பொழுதில் மக்கள்மீது பீரங்கிகள் திரும்பின. குண்டுகள் மழையாய் பொழிந்தன. மக்கள் செய்வதறியாது துடித்தனர். காப்பாற்றுமாறு மாதாவை இறைஞ்சித் துடிதுடித்தனர். நிர்க்கதியான மாதாவும் மக்களின் துயர் துடைக்க முடியாத நிலையில் தவித்தாள்.

வீழ்த்தப்பட்ட மடுமாதா

போர் உக்கிரமாயிற்று. இராணுவத்தின் எறிகணை இருதய ஆண்டவர் ஆலயம்மீது வீழ்ந்து வெடித்தது. ஆலய மண்டபம் குருதி வெள்ளத்தில் நனைந்தது. உயிரை காக்க தஞ்சமடைந்த சனங்கள் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று முப்பத்து ஒருபேர் அவ்  இடத்தில் இனக்கொலை செய்யப்பட்டனர்.

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா ! | Justice For Kochikadai Antony Why Forget Mary

13 சிறுவர்கள் உள்ளடங்க எல்லாமாக 44பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களின் உடல்கள் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மடுவில் விதைக்கப்பட்டது.

தொடர்ந்து தாக்குதல்களை இராணுவத்தினர் விரிவுபடுத்தினர். அன்றிரவு மடு தேவாலயப் பகுதியை முழுமையாக இலங்கை  அரச படைகள் கைப்பற்றியிருந்தன.

வீழ்ந்தது மடு. வீழ்த்தப்பட்டாள் மடு மாதா. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எப்போதும் போர் அறத்துடனே செயற்பட்டுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகள் மடுப் பிரதேசத்தை மக்களின் நம்பிக்கையின் பொருட்டு போர் தவிர்ப்பு வலயமாகவும் புனித பிரதேசமாகவும் மதித்து வந்தனர்.

புலிகளற்ற மடு தேவாலயத்தில் நிராயுத பாணியாக தனித்திருந்த மக்களையே இராணுவத்தின் படுகொலை செய்தனர். ஒருவேளை அங்கு விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் தம் உறவுகள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

போர் தவிர்ப்பு வலயமாக நடைமுறைப்படுத்தி, விடுதலைப் புலிகள் தமது நடமாட்டத்தை தவிர்த்த தேவாலயப் பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் பெரும் இராணுவ வெற்றியாக அதை சித்திரித்தனர். அத்துடன் அன்றைய சூழலில் தேர்தலில் மடுமாதாவை வீழ்த்திய செய்தியை சந்திரிக்கா வெற்றிச் செய்தியாக பயன்படுத்தினார்.

தெய்வங்கள் மீதும் பாரபட்சமா?

இத்தனைக்குப் பிறகும்கூட, தெய்வங்கள்மீதான போரும் பாரபட்சமும் இலங்கைத் தீவில் குறையாமல் இருப்பதுதான் இன்னமும் வேதனை தருகின்ற விடயம். இன்றைக்கும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வழிபாட்டு இடங்களை ஆக்கிரமிக்க வேண்டும் அழிக்க வேண்டும் என்றும் அதன் வரலாற்றை இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் மேற்கொள்ளப்படுகின்ற முனைப்புக்கள் பயங்கரமாக நீள்கின்றன.  

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா ! | Justice For Kochikadai Antony Why Forget Mary

சைவ ஆலயங்கள்மீது தொல்லியல் திணைக்களமும் இராணுவமும் பௌத்த பிக்குகளும் ஒரு ஆக்கிரமிப்புப் போரை செய்து வருகின்றனர். இது புதிய அரசின் காலத்தில் நிறுத்தப்படுமா? உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சரியான வகையில் விசாரணை இடம்பெற்று நீதி முன்வைக்கப்படும் என்று கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நம்புகிறார்.

இவர், மடு தேவாலயத்திலும் நவாலி தேவாலயத்திலும் நடந்த இனப்படுகொலைகளுக்கு விசாரணைகளையும் நீதியையும் ஏன் கோரால் இருக்கின்றார்? தமிழர்களின் நிலத்தில் தேவாலயங்கள்மீதும் தெய்வங்கள்மீதும் இத்தகைய இனவழிப்புத் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும் என்பதை சொல்லுகிறார்களா? ஆனால் தெய்வத்தின் முன்பாக நீதி ஒன்றாகவே இருக்க முடியும்.

அது வடக்கிற்கு ஒரு மாதிரியும் தெற்கிற்கு இன்னொரு மாதிரியும் இருப்பதில்லை. தெய்வங்கள் மத்தியிலும் இனங்கள் மத்தியிலும் இந்தப் பாரபட்ச அணுகுமுறைகள் நீண்டால் இந்த தீவில் ஏதோ ஒரு வகையில் துயரங்கள் அறுவடையாகிக் கொண்டே இருக்குமல்லவா?

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 20 November, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024