இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரஜைகளின் விசா அனுமதி காலம் நீடிப்பு
Russo-Ukrainian War
Government Of Sri Lanka
Sri Lanka visa
By Kiruththikan
இலங்கையில் தங்கி இருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கட்டணங்களை அறவிடாது, அவர்களின் விசா அனுமதி காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரஜைகளுக்கு முதலில் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இரண்டு மாதங்களுக்கு விசா அனுமதி நீடிக்கப்பட்டது.
இரு நாடுகளிலும் நெருக்கடியான நிலைமை இன்னும் முடிவுக்கு வாராத சூழலில் மீண்டும் அவர்களின் விசா அனுமதி காலத்தை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் சுமார் 60 நாட்களை தாண்டி தொடர்ந்தும் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி