ஒரே நாளில் முகம் பளபளக்க எளிய முறை இதோ...!
நாம் எப்பொழுதும் நம்முடைய முகம் அடுத்தவர்கள் விரும்பும்படி ஆழகாக இருக்க வேண்டும் என்று முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
சிலருக்கு என்ன தான் முகம் வெள்ளையாகவும், அழகாகவும் இருந்தாலும் அவர்களுக்கு முகம் எப்பொழுதும் வறட்சியாக காணப்படும்.
மேலும் வெயிலினால் அவர்களுக்கு வியர்வை வடியும் பொழுதும் முகம் பார்ப்பதற்கு சோர்வாகவும், பொலிவில்லாமலும் தோற்றமளிக்கும்.
வீட்டில் உள்ள பொருட்கள்
இதனால் முகங்களில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதை போக்குவதற்கு சிலர் அழகு சாதன கிரீம்களை பயன்படுத்துவார்கள். ஆனால் நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் இதனை சரி செய்து விடலாம்.
முகம் வறட்சியாக இருந்தால் அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
கோப்பி பவுடர்
கோப்பியில் சருமத்தைப் பொலிவாக்கும் அற்புதமான பண்புகள் உள்ளன. கோப்பி பவுடர் வைத்து முகத்தை ஸ்கிரப் செய்யும் போது முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

ஒரு டீஸ்பூன் அளவு கோப்பி பவுடரை ஒரு டீஸ்பூன் அளவு தண்ணீரில் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து நம் முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போல் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி எடுத்துக் கொள்ளலாம்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்