போலி நாணயத்தாள் பாவனை - யாழில் கடமையாற்றும் இராணுவ வீரர் கைது
Jaffna
By pavan
ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் வைத்திருந்ததாகக் கூறப்படும் இராணுவ வீரர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் மஹவ தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வாசவிளான் இராணுவ முகாமில் கடமையாற்றும் மொர கொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி நாணயத்தாள்

குறித்த சந்தேக நபர் இராணுவ முகாமில் இருந்து விடுமுறையில் சென்றிருந்த போது போலி நாணயத்தாள்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய இராணுவ வீரர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 22 மணி நேரம் முன்