அடித்துக் கொல்லப்பட்ட குடும்பஸ்தர் - சிக்கிய உறவினர்: வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Police Investigation Crime
By Thulsi Jan 30, 2026 07:56 AM GMT
Report

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் தாக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.  

இச் சம்பவத்தில் பழம்பாசி, கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த நாகையா நாகராஜா (வயது 41) என்பவர் உயிரிழந்துள்ளார்

பெலவத்தை அலுவலகத்துக்குள் இருந்து ஆட்சி - பொறுக்க முடியாது: நாமல் சீற்றம்

பெலவத்தை அலுவலகத்துக்குள் இருந்து ஆட்சி - பொறுக்க முடியாது: நாமல் சீற்றம்

சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம் 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த குறித்த நபர் கடந்த 27ஆம் திகதி இரவு, கடைக்கு சென்று உணவு வாங்கிக் கொண்டு வீடு நோக்கி திரும்பிய வேளையில், அவரது தலையின் பின்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் அதிக இரத்தகசிவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடித்துக் கொல்லப்பட்ட குடும்பஸ்தர் - சிக்கிய உறவினர்: வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம் | Family Men Beaten To Death In Ottusuddan

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, அப்பகுதியை சேர்ந்த 30 வயதுடைய மரணமடைந்த நபரின் மச்சான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்திய போது குறித்த சந்தேகநபர் கொலை செய்ததை காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதால் நேற்றையதினம் (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவரின் மகளை கொலை செய்வதாக அவர் மிரட்டியதாகக் கூறப்படுவதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக, கோடரி பிடியினால் தலையில் தாக்கியதாக சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ். சர்வதேச விமான நிலையம் - அரச தரப்பு வெளியிட்ட அறிவிப்பு

யாழ். சர்வதேச விமான நிலையம் - அரச தரப்பு வெளியிட்ட அறிவிப்பு

கியூபாவிற்கு எதிரான அழுத்தங்களை தீவிரப்படுத்திய ட்ரம்ப்...! சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கை

கியூபாவிற்கு எதிரான அழுத்தங்களை தீவிரப்படுத்திய ட்ரம்ப்...! சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016