மாணவர்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் கைது..!
துன்புறுத்தல்
இரத்தினபுரியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபர், பல மாணவர்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலை மாணவர்களை அதிபர் வெகுநாட்களாக தனது விடுதிக்கு அழைத்து அவர்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் நேற்று முன்தினம் (23) இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர், கடுமையான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,

