விவசாய நிலத்தில் வைரம்: ஒரே நாளில் லட்சாதிபதியான விவசாயி
India
Climate Change
World
By Shalini Balachandran
வயலில் கிடைத்த வைரக்கல்லால் பெண் விவசாயி ஒருவர் ஒரே நாளில் அதிஷ்டசாலியாக மாறியுள்ள செய்தி தற்போது வைரலாகி வருகின்றது.
இந்திய (India) மாநிலமான ஆந்திரப்பிரதேசம், கர்நூல் மாவட்டம் துக்கலி அடுத்த ஜிகவா சிந்தில் கொண்டா பகுதியில் சில தினங்களாகவே மழை காலமாக காணப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் வயல் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
பெண் விவசாயி
அங்கு அவருக்கு வைரக்கல் ஒன்று கிடைத்துள்ள நிலையில், இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பலரும் அதனை வாங்குவதற்கு முன்வந்துள்ளனர்.
இதையடுத்து, அந்த பெண் விவசாயி வைரத்திற்கு ரூபாய் 18 லட்சம் விலை நிர்ணயித்த நிலையில், சென்னம்பள்ளியை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் ரூபாய் 13.50 லட்சத்திற்கு வைரக்கல்லை வாங்கி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்