விவசாயிகளுக்கான உர மானியம் : சஜித் வெளியிட்ட தகவல்

Parliament of Sri Lanka Sajith Premadasa Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Sathangani Jan 10, 2025 10:08 AM GMT
Report

இலங்கையில் உர மானியத்துக்கு உரித்துடைய ஏனைய விவசாயிகளுக்கு எப்போது மானியம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து அரசாங்கத்திற்கு இந்தப் பிரச்சினைகளை முன்வைக்கும் நடவடிக்கைகள் நிமித்தம் சஜித் பிரேமதாச இன்று (10) இவ்வாறு இந்த பிரச்சினையை முன்வைத்து கருத்துத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தின் கூற்றுப்படி, 9,96,992 விவசாயிகள் உர மானியத்திற்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர். இவர்களுக்கு உர மானியமாக 15,000 ரூபா, 10,000 ரூபா என 2 கட்டமாக மொத்தம் 25,000 ரூபா வழங்கப்படவுள்ளன.

புறக்கணிக்கப்பட்ட சஜித் தரப்பு: சபாநாயகருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

புறக்கணிக்கப்பட்ட சஜித் தரப்பு: சபாநாயகருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை

இதுவரை 684,194 விவசாயிகள் 15,000 ரூபா மானியத்தைப் பெற்றுள்ளனர். அதாவது 69% ஆனோருக்கு இது கிடைத்துள்ளது. 31% ஆனோருக்கு அதாவது 312,798 பேருக்கு இது இன்னும் கிடைக்கவில்லை.

விவசாயிகளுக்கான உர மானியம் : சஜித் வெளியிட்ட தகவல் | Farmers Eligible For Fertilizer Subsidy Sajith

15,000 ரூபா மானியத்திற்கு உரித்துடைய ஏனைய 312,798 விவசாயிகளுக்கு எப்போது இந்த மானியம் வழங்கப்படும்? அவ்வாறு மானியம் வழங்கப்படும் திகதியை அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையிலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அரசாங்கத்திடம் முன்வைப்பது எனது பொறுப்பாகும்.

கடமைகளைப் பொறுப்பேற்ற தலதா அத்துகோரள

கடமைகளைப் பொறுப்பேற்ற தலதா அத்துகோரள

24.9 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

314,956 விவசாயிகளுக்கு அதாவது 32% ஆனோருக்கு மட்டுமே 10,000 ரூபா மானியம் கிடைத்துள்ளது. 682,041 விவசாயிகளுக்கு அதாவது 68% ஆனோருக்கு இன்னும் கிடைக்கவில்லை.

விவசாயிகளுக்கான உர மானியம் : சஜித் வெளியிட்ட தகவல் | Farmers Eligible For Fertilizer Subsidy Sajith

10,000 ரூபா மானியத்தை எஞ்சிய 682,041 போருக்கும் வழங்கும் திகதியை அறிய விரும்புகின்றோம்.

இந்த 25,000 ரூபா மானியத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு 24.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 9.9 பில்லியன் ரூபா அதாவது 40% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே முழுத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்த உறவுகளை சபையில் நினைவுகூர்ந்த சிறீதரன் எம்.பி

தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்த உறவுகளை சபையில் நினைவுகூர்ந்த சிறீதரன் எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025